தியானமும் வெற்றிக்கான மந்திரமும்.

வெற்றி என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். கார பிரியர்கள் என்றால் காரம் சாப்பிடுவதை போல. இனிப்பு பிரியர்களுக்கு இனிப்பு சாப்பிடுவதை போன்றது.

வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு பல யுக்திகள் இருக்கின்றன. பல யுக்திகள் இருந்தாலும் ஒரு சிலர் ஒரு நிகழ்வு தங்களுக்கு சாதகமாக நடக்க வில்லை என்றாலும் அதற்கு ஒரு பெயர் சூட்டி மூலையில் முடங்கி விடுவர். அந்த பெயர் என்னவென்றால் தோல்வி. நாம் தோற்று விட்டோம். இனிமேல் வாழ்க்கையில் வெற்றி என்பதே கிடையாது என்று இவர்களே ஒரு பொய்யான ஒரு காரணத்தை சொல்லி வரப்போகும் பல வெற்றிகளை இழந்து விடுகின்றனர்.

வெற்றிக்கான பல மந்திரங்கள் இருக்கிறது என்று மேலே கூறினேன். அவற்றில் ஒன்றுதான் கடந்த கால நினைவுகளை மறந்து நிகழ்காலத்தில் வாழ செய்யும் மன நிலை.

ஒரு சிலர் வசதியாக வாழ்ந்து இப்போது எல்லாவற்றையும் இழந்து வசதியின்றி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் பேச்சுக்கு பேச்சு
பார்த்தீர்கள் என்றால் நான் வாழ்ந்த வாழ்க்கை என்ன, வசதி என்ன, என் தலை எழுத்து இப்படி ஆகி விட்டதே என்று புலம்பி தீர்த்து விடுவார்கள்.
அல்லது விட்டத்தை பார்த்துகொண்டு பழைய வசதியான வாழ்க்கையை நினைத்து, நிகழ்காலத்தில் ஏழையாய் இருந்து, ஏழையாகாவே தங்களுடைய வாழ்க்கையை முடித்து கொள்வார்கள்.

நிகழ்காலம் என்பது போற்றுவதற்குரிய நாள். இந்த நிகழ்காலத்தை நீங்கள் கோட்டை விட்டு விட்டால் அது கடந்த காலமாகிவிடும்.
ஒருவர் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருடைய குடும்ப சூழ்நிலை, வறுமை காரணமாக அவரால் மேற்கொண்டு படிக்க முடிய வில்லை. படித்து கொண்டு இருந்த பட்டபடிப்பை குடும்பத்தின் வறுமை காரணமாக பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

கடவுள் ஒரு கதவை மூடினாலும் இன்னொரு கதவை திறந்து விடுவார் என்ற கூற்றுக்கு ஏற்ப அவருக்கு பதினெட்டு வயதிலேயே அரசாங்க வேலை கிடைத்துவிட்டது.

பட்டபடிப்பு என்பது இப்போது மிகவும் அவசியமாகிவிட்டது. எந்த வேலைக்கு சென்றாலும் குறைந்த பட்ச தகுதி பட்ட படிப்பு என்பது இப்போது சர்வ சாதரணமாகிவிட்டது.

பட்டபடிப்பை தொடர்வதற்கு எவ்வளவோ வழிகள் இந்த காலத்தில் இருக்கின்றன. கல்லூரிக்கு சென்று பட்ட படிப்பு முடிக்க முடியவில்லை என்றாலும் கல்லூரிக்கு செல்லாமலே தொலை தூர கல்வி போன்ற வசதிகளினால் ஒருவருடைய ஓய்வு நேரத்தில் பட்ட படிப்பு படிப்பதற்கு வசதிகள் இருக்கின்றன.

இவ்வளவு வசதிகள் இருந்தும் அந்த நண்பரால் தொலை தூர கல்வியில் கூட விட்டுப்போன பட்ட படிப்பை முடிக்க முடியவில்லை. பலமுறை விண்ணப்பித்தும் வேலைக்கு சென்று கொண்டே ஓய்வு நேரத்தில் படிப்பதற்கு வாய்ப்பு இருந்தும் ஆர்வம் இல்லாத காரணத்தினால் பட்ட படிப்பை முடிக்க முடியவில்லை. பதினெட்டு வயதில் வேலை கிடைத்தும் பட்ட படிப்பை ஓய்வு நேரத்தில் முடித்து இருந்தால் தற்பொழுது பார்க்கும் வேலையை விட நல்ல வேலை கிடைத்திருக்கும். சிறப்பான உத்தியோகத்தில் இருந்திருக்கலாம்.

படிக்க வேண்டிய காலத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடிய வில்லை. இப்போது படிக்க வசதி நேரம் இருந்தும் படிப்பதற்கு மனது இல்லை. அதை பற்றி நினைத்து வருத்தபடுவதினால் ஒன்றும் ஆக போவதில்லை.  

யாராக இருந்தாலும் கடந்த காலத்தை நினைத்து வருத்த படுவதினால் ஒன்றும் ஆக போவதில்லை. வருத்தபட்டு கொண்டு நிகழ் காலத்தையும்
கோட்டை விட்டு விட கூடாது. நிகழ்காலத்தில் பல நல்ல நிகழ்வுகளை கோட்டை விடாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

கடந்த காலத்தை பற்றி நினைத்து கொண்டு இருந்தால் எந்த அறிவியல் வளர்ச்சியும் இந்த உலகத்தில் கிடையாது.

தாமஸ் ஆல்வா எடிசன் என்ற புகழ் பெற்ற விஞ்ஞானி பல ஆயிரம் தடவை தோற்று போய்தான் பல அறிய கண்டு பிடிப்புகளை இந்த உலகத்திற்கு அளித்து இன்று நாம் அனுபவித்து வருகிறோம். பழைய தோல்விகளையும், காலத்தையும் அவர் நினைத்து கொண்டு இருந்தால் இன்று நாம் அவர் கண்டுபித்த மின்சாரத்தின் பயனை அனுபவிக்க முடியாது. புகழ் பெற்ற விஞ்ஞானிகள் அனைவரும் கடந்த கால தோல்விகளையும், கடந்த கால நிகழ்வுகளை மறந்தும், நிகழ் காலத்தை மட்டும் நினைவில் கொண்டதினால்தான் நாம் பல அறிவியல் சார்ந்த பயன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம்.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு பூமியில் இருந்து இயக்ககூடிய ஏவுகணை ஒன்றை அனுப்பியது. இந்த ஏவு கணை செவ்வாய் கிரகத்தை பற்றிய தோற்றங்களை புகை படங்கள் எடுத்து அனுப்புவதற்க்காக அனுப்பப்பட்டது.

திடிரென்று புகைப்படங்கள் விண்வெளி தளத்திற்கு கிடைப்பதில் தடை ஏற்பட்டது. விஞ்ஞானிகள் உடனடியாக தடைக்குண்டான காரணம் என்ன என்பதை இரவு பகலாக ஆராய்ந்து, காரணத்தை கண்டு பிடித்து தொடர்ந்து தங்கு தடையின்றி புகை படங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். விஞ்ஞானிகள் புகைப்படம் ஏன் வரவில்லை என்று சோர்வடைந்து கடந்த காலத்தை பற்றி நினைக்காமல்
நிகழ்காலத்தை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டதினால்தான் செவ்வாய் கிரகம் பற்றிய பல அறிய செய்திகள் நமக்கு இன்று நமக்கு தெரிய வருகின்றன. இன்று சில நாடுகளில் செவ்வாய் கிரகம் செல்வதற்கு முன்பயண பதிவு reservation கூட செய்ய ஆரம்பித்து விட்டனர்.

விளையாட்டு துறையை எடுத்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு நாடே சாம்பியன் ஆக இருக்க முடியாது. நேற்றைய சாம்பியன் இன்று கடைசி நிலைக்கும் தள்ள படலாம். கடைசியில் இருந்த இலங்கை போன்ற அணி கூட கிரிக்கெட்டில் சாம்பியன் ஆனது.

தோல்விகளின் காரணத்தை மட்டும் கருத்தில் கொண்டு கடந்த காலத்தை மறந்து நிகழ் காலத்தில் champion மட்டும் ஆக வேண்டும் என்று விளையாடியதால்தான் நேற்று வரை கடைசி நிலையில் இருந்த அணி இன்று சாம்பியன் ஆக உள்ளது.

நாளை என்பது வரலாம் அல்லது வராமல் போகலாம். நாளை மழை பெய்யும் வெய்யில் அடிக்கும் என்று கணிக்கும் வானிலை ஆய்வுகள் கூட சில சமயங்களில் தவராகிவிடுகிறது. கிடைப்பதற்கு அறிய இன்றைய நாள் பொழுதில் உற்சாகமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல் பட்டு வெற்றிகரமான மறுநாளை எதிர்பாருங்கள்.

மருத்துவ ரீதியாக இன்று பெரும்பாலனவர்கள் அவதி படுவதற்கான காரணம். நேற்றைய தோல்விகளை பற்றியும், நாளை எப்படி இருக்கும் என்பதை பற்றிய பயமும்தான்.

நேற்றைய தோல்விகளையும், கடந்த கால கசப்பான அனுபவங்களையும், மறந்து, நிகழ்கால மனிதர்களாக வெற்றிகரமாக வாழ்வதற்கு ஒருவருடைய மனது முக்கிய காரணமாகிறது.

மனது என்பது எந்த ஒரு நிகழ்வையும் பதிவு செய்யும் taperecorder ஐ போன்றது. அதில் நல்ல பதிவுகளும் இருக்கும், தேவை இல்லாத பதிவுகளும் இருக்கும். தேவை இல்லாத பதிவுகள் என்றுமே மனித குலத்திற்கு நன்மை செய்யாது. தேவை இல்லாத பதிவுகள் என்பது கடந்த கால தேவை இல்லாத நினைவுகள், தோல்விகள். இந்த பதிவுகளை அழிக்கவேண்டும் என்றால் அதற்க்கு ஒரு eraser தேவை. அந்த eraser தான் தியானம் என்னும் அற்புத கலை.

தியானம் என்பது மனம் சார்ந்த பயிற்சி, நோய் தீர்க்கும் மருந்து. தியானம் என்னும் அற்புத கலையை கொண்டு நேற்றைய தேவை இல்லாத பதிவுகளை மனதில் இருந்து அழித்து, இன்றைய பொழுதை மட்டும் நினைத்து நாளைய ஒளிமயமான எதிர்காலத்தை மனதிற்கு அறிவுறுத்தும் அற்புத கலை தியானம் என்றால் அது மிகை இல்லை. அதுவே வெற்றிக்கான மந்திரகோல்  ஆகும்.  
                                     
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள