கவலைகளை எப்படி களைவது?

ஏன் கவலையாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ் வொரு காரணத்தை கூறுவர்.

ஏதாவது ஒரு துன்பம் நேர்ந்துவிட்டால் அந்த துன்பத்தை நினைத்து கவலை என்று கூறுவர். சிலர் ஒரு சிலருடைய இறப்பினால் உண்டாகும் துக்கத்தை தாங்க முடியாமல் கவலைபடுவார்கள்.
சிலர் அலுவலகத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளினால் உண்டாகும் பிரச்சனையை நினைத்து கவலை படுவார்கள்.

இதுபோன்று பலரும் பல சூழ்நிலை காரணமாக உருவாகும் நிகழ்வுகளினால் கவலை படுவர்.

கவலைகளை சாதரணமாக எடுத்துக்கொண்டு அதற்காக கவலை படாமல் கலங்காமல் இருக்க வேண்டும் என்றால் எந்த ஒரு நிகழ்வையும் serious ஆகவும் எடுத்து கொள்ளகூடாது அதே சமயத்தில் சாதரணமாகவும் எடுத்து கொள்ளகூடாது. இயல்பாக எடுத்து கொள்ள வேண்டும்.

துக்கம் உண்டாவது என்பது இயற்க்கை அதற்காக அந்த துக்கத்தையே எப்போதும் நினைத்து கொண்டு இருந்தால் எதிர்காலம் என்னாவது? குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? துக்கத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவேண்டும். அதைவிட்டு எப்பொழுதும் துக்கத்தை நினைத்து கொண்டு இருந்தால் கவலைகள் தான் மிஞ்சும். அந்த கவலைகளின் விலைவாக உடல் நலம்தான் கெடும்.


சில பேர் பார்த்தீர்கள் என்றால் எதையாவது ஒரு விஷயத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என்றால் உடனேயே அழுது விடுவார்கள்.அப்படி அழுகும்போது அவர்கள் மனதில் உள்ள சோகமும் சேர்ந்து அந்த கண்ணீருடன் கரைந்து விடுகிறது. மனதும் அவர்களையும் அறியாமல் காலியாகி விடுகிறது.

சிலர் கோயிலுக்கு சென்று தங்கள் மனதில் உள்ள குறைகள் சோகங்களை அழுது புலம்பி பிரார்த்தனை செய்வார்கள். அப்படி பிரார்த்தனை செய்யும் போது மனதில் உள்ள குறைகள் அழுகையுடன் சேர்ந்து தன்னாலேயே வெளியேறிவிடும். அதனால் மனதும் வெற்றிடமாகி, என்னுடைய மன பாரத்தை கடவுளிடம் இறக்கி வைத்து விட்டேன். இனி அவர் பார்த்து கொள்வார் என்று ஒரு நிம்மதியுடன் இருப்பார்கள்.

அழுகை என்பது கவலைகளுக்கு உரிய ஒரு அருமையான வடிகாலாகும். தாங்க முடியாத கவலைகளினால் தாக்கப்படும்போது அழுது தீர்த்து விடுவது மிகவும் நல்லது. யாரிடம் அழுவது? அது உங்களுக்கு வேண்டியவர்களாகவும்  இருக்கலாம், கோயிலாகவும்  இருக்கலாம் அல்லது தனிமையில் உட்கார்ந்து அழுது விடலாம்.

அழுகை என்பது இயற்கையால் கொடுக்கப்பட்ட ஒரு அருமையான சாதனம். அதனை கொண்டு தாங்க முடியாத கவலைகளையும் கவலைகளினால் உண்டாக கூடிய வியாதிகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

முன்பெல்லாம் இறந்த வீட்டில் அழுகை சத்தம் அந்த உடல் மயானத்திற்கு செல்லும் வரையிலும், அதன் பிறகு குறிப்பிட்ட நாட்கள் வரை அல்லது குறிப்பிட்ட நாட்களில் அதாவது மூன்றாம் நாள், எட்டாம் நாள், முப்பதாவது நாள் என்று ஒப்பாரி வைத்து அழுவார்கள். அப்படி ஒப்பாரி வைத்து அழும்போது இறந்தவரின் சோகம், அவர் மறைவினால் உண்டான கவலைகள் தன்னாலேயே வெளியேறிவிடும்.        

இப்போது இறந்த வீட்டில் அழுகை என்பதை பொதுவாக யாரிடமும் பார்க்க முடியவில்லை. ஏன் என்றால் அழுதால் மற்றவர்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்கள் என்று.

இன்னும் சிலர் பார்த்தீர்கள் என்றால் தங்கள் கவலைகளை யாரிடமாவது சொல்லி புலம்பி கொண்டு இருப்பார்கள். அப்படி புலம்பும்போது அவர்களையும் அறியாமல் அவர்களுடைய மனது இலகுவானது போல உணருவர். ஆனால் மற்றவர்கள் அவரை பார்த்து சரியான புலம்பல் ஆசாமி என்பர் .

கவலைகளை மறக்க அடுத்து ஒரு நல்ல பழக்கம் dairy எழுதுவது. மனதில் உள்ள சோகங்களை, கவலைகளை டைரியில் எழுதும் போது மனதில் உள்ள கவலைகளை தொலைத்துவிட்டது போல ஒரு உணர்வு உண்டாகும். அதனால்தான் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் dairy எழுதும் பழக்கத்தை மறக்காமல் வைத்திருந்தனர். எந்த ஒரு விசயத்தையும் அவர்கள் serious ஆக எடுத்து கொள்ள மாட்டார்கள்.

கவலைகளை தொலைப்பதற்கு கோயிலுக்கும் போக மாட்டேன், மற்றவர்களிடம் சொல்லவும் மாட்டேன் என்பவர்களுக்கு தனிமையில் தனக்கு தானே பேசியோ அழுது புலம்பியோ கவலைகளில் இருந்து விடுபடலாம்.

கவலைகளை கண்டு துவளாமல் இருப்பதற்கு எந்த ஒரு பிரச்சனையையும் சாதரணமாக எடுத்து கொள்வது. அதாவது “take it easy policy” என்ற மன நிலை வேண்டும்.

தியானம் போன்ற கலைகள் ஒருவரை எந்த ஒரு காரியத்திற்கும் கலங்க செய்யாது. எதையும் take it policy என்று எடுத்து கொள்ள செய்யும் மனநிலைக்கு தயார் படுத்தி விடும். 

அப்படி தயார் படுத்தும்போது ஒருவர் இறந்ததினால் உண்டாகும் சோகத்தை கூட, மனிதர்களாக பிறந்தவர்கள் இறந்து தானே ஆக வேண்டும் அல்லது இறந்தவர்களை நினைத்து கவலைபடுவதினால் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்ற மனத்தெளிவு உண்டாகும்.

தியானம் என்பது மனம் சார்ந்த ஒரு கலை என்பதாலும், கவலைகளின் பிறப்பிடம் மனது என்பதனாலும், கவலைகளை களைவதற்கு தியானம் ஒரு அற்புத மருந்தாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள