தியானமும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைதலும்

மனித மனம் என்பது அற்புதமான சக்தி கொண்டது. மனம் என்னும் இந்த 
அற்புத சக்தியை ஒவ்வொருவரும் முறையாக பயன் படுத்தினால் வியக்க தகுந்த 
சாதனைகள்  பல இந்த உலகத்தில் சாதிக்கலாம். 

ஆனால் அனைவரும் மனம் என்னும் நம்முடைய சக்தியை முழுமையாக 
பயன் படுத்தமுடிகிறதா என்று கேட்டால் இல்லை என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். 

காரணம் நம்மில் பெரும்பான்மையனவர்கள் மனதில் தேவையில்லாத பயம், 
நம்பிக்கையின்மை, நம்மால் செய்ய முடியாது, நாம் தோல்வி அடைந்து 
விடுவோம் போன்று எதிர் மறையான சிந்தனைகள் ( Negative thoughts) போன்றவை மனதை அதிகமாக ஆக்கிரமித்து கொண்டு உள்ளன. 
இவைகள் குப்பைகள் போன்று மனதை ஆக்கிரமித்து கொண்டு உள்ளன.
இந்த குப்பைகள் ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் தடை 
கல்லாக நிற்கின்றன. 

உணவு அருந்தும்போது சாப்பிடும் தட்டை 
சுத்தம் செய்து சாப்பிடும் நாம் மனம் என்ற தட்டை சுத்தம் செய்யாமலே
அசுத்தம் அடைந்த தட்டிலேயே சாப்பிட்டு கொண்டு இருக்கின்றோம்.  

 சரி நாம் சாப்பிடும் தட்டை தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்து 
சாப்பிடுகிறோம். ஆனால் மனம் என்னும் தட்டை எப்படி சுத்தம் செய்வது?

ஆம் சாப்பிடும் தட்டை சுத்தம் செய்ய தண்ணீர் போல மனம் என்னும் 
தட்டை தியானம் என்ற தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய. 

சுத்தமான அந்த மனதின் மூலமாக வாழ்வில் வியக்கதகு சாதனைகளை 
படைத்து சந்தோசமாக வாழலாம்.
         
இந்த வலைப்பதிவின் நிறுவனர் கடந்த 24 வருடங்களாக தியான பயிற்சி அளித்து வருகிறார். தியான பயிற்சி ஆசிரியரை கீழ்க்கண்ட படிவத்தின் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள