தியானமும் கவலைகளுக்கு முடிவும்.

கவலைகள் என்பது ஒரு மனிதனுக்கு புற்று நோயை போன்றது. புற்று நோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ அதை போன்று கவலை என்பது ஒரு கவலை போய் இன்னொரு கவலையை உண்டாக்கும் சக்தி கொண்டது. தலை வலி போய் திருகு வலி வந்த கதையாக.

ஒரு சிலர் பார்த்தீர்கள் என்றால் ஏன் ஒரு மாதிரியாக் இருக்கிறீர்கள் என்று கேட்டால், ஒன்றுமில்லை ஒரு பிரச்னை. சரி என்ன பிரச்னை என்று கேட்டால் இன்று காலையில் இருந்து குழந்தைக்கு உடம்பு சரியில்லை. எதுவுமே சாப்பிட மாட்டேன் என்கிறது. என்ன வென்று தெரிய வில்லை. ஒரே கவலையாக இருக்கிறது என்று கூறுவார். என்னவென்று தெரியவில்லை என்கிறபோது எதற்கு கவலைப்பட வேண்டும். டாக்டரிடம் குழந்தையை அழைத்து சென்றால் அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லாததற்கான காரணத்தை மேற்கொண்டு குழந்தைக்கு சிகிச்சை அளிப்பார். குழந்தையும் நலமுடன் இருக்கும். அதை விடுத்தது குழந்தைக்கு உடம்பு சரியில்லாததை பிரச்சனையாக நினைத்தால் கவலைதான் மிஞ்சும்.

எந்த ஒரு பிரச்சனையையும் யாராலும் சமாளிக்கமுடியும். எந்த ஒரு பிரச்சனையையும் தீர அலசி ஆராய்ந்தால் பிரச்சனைக்குரிய முடிவு கிடைக்கும். முடிவு கிடைக்க வில்லையென்றால் உங்கள் மீது உண்மையான நலன் கொண்ட உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனையை நாடலாம். அப்போது பிரச்சனைக்குரிய தீர்வு கிடைக்கும். பிரச்சனைகளை பிரச்சனையாக மட்டும் பார்த்தல் பயம் மட்டுமே மிஞ்சும்.  

கவலைகள் உங்கள் மனதில் இருந்து விரட்ட வேண்டும் என்றால் அதற்க்கு நீங்கள் உழைக்க தயாராக இருக்க வேண்டும். நான் உழைத்து கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் கவலை என் மனதை விட்டு போகவில்லை என்று சிலர் கூறுவார்கள்.

உழைப்பு என்றால் தான் செய்யும் வேலை மற்றும் தொழிலில் முழு கவனத்துடன் வேலை செய்வது. முழு கவனத்துடன் வேலை செய்யும்போது மனது வேலையில்தான் கவனமாக இருக்கும். கவலைக்கு இடம் கொடுக்காது.

மாபெறும் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் ஒருமுறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது கவலை படுவதற்கு எனக்கு நேரம் இல்லை என்றார். இதை கேட்டது ஒரு நிருபர். அந்த நிருபருக்கு ஒரே ஆச்சர்யம். என்னடா இது கவலையில்லாத ஒரு மனிதனா அல்லது கவலையை பற்றி நேரம் இல்லை என்று சொல்லும் ஒரு மனிதனா என்று ஆச்சர்யம். வின்ஸ்டன் சர்ச்சில் அதற்க்கு கூறிய விளக்கம் நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறேன், அதனால் எனக்கு கவலை படுவதற்கு நேரம் இல்லை என்று கூறினார். உண்மையிலேயே நல்ல பதில் மற்றும் உண்மை.

வின்ஸ்டன் சர்ச்சில் மட்டும் அல்லாது யார் வேண்டுமானாலும் இதை கடைபிடிக்கலாம். மறக்க முடியாத கவலைகளில் அவதிப்படும்போது உங்களை ஒரு வேலையில் கடுமையாக ஈடுபடுத்தி கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம். வழக்கத்திற்கு மாறாக கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாக உழைக்கும்போது உடம்பில் அசதி ஏற்படும். உடம்பில் அசதி ஏற்பட்டால் நல்ல தூக்கம் வரும். நல்ல தூக்கம் இருக்கும்போது அடுத்த நாள் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். கடுமையாக உழைக்கும்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல பணபுழக்கமும் உண்டாகும்.   

வேலை அல்லது தொழில் இல்லையென்றால் உங்களுக்கு பிடித்த வேலையில் ஈடுபடுத்தி கொள்ளலாம். தோட்டத்தை சுத்த படுத்தலாம், வீட்டை சுத்த படுத்தலாம், வேண்டாத குப்பைகளை ஒழிக்கலாம், ஒரு புதிய விஷயத்தை கற்று கொள்ளலாம். கைவினை பொருள்கள், ஓவியம் போன்ற வேலைகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம். மனதும் உடலும் ஒரு விசயத்தில் ஈடுபடும்போது பின் கவலைக்கு இடம் ஏது?

கவலைகளின் மூல காரணத்திற்கு நம்முடைய கற்பனையும் ஒரு காரணமாகும். செய்திதாள்களில் மற்றும் தொலை காட்சி செய்திகளில் விபத்து இல்லாத செய்தி என்பது அபூர்வமாகத்தான் இருக்கும். அது விமான விபத்தாக இருக்கலாம், பேருந்து விபத்தாக இருக்கலாம், அல்லது நடந்து செல்லும்போது வாகனம் மோதி இறந்த விபத்தாக இருக்கலாம். அதை நினைத்து நீங்கள் எங்குமே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியுமா? ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் ஒரு வழியை உபயோகபடுத்திதான் ஆக வேண்டும். நடந்து செல்லவேண்டும் அல்லது ஏதாவது ஒரு வாகனத்தில் சென்றுதான் ஆக வேண்டும், விபத்து நடக்கிறது என்று வீட்டுக்குள்ளேயே இருந்தால் என்ன நடக்கும்?

கல் தடுக்கி விழுந்து பிழைத்தவனும் உண்டு, புல் தடுக்கி செத்தவனும் உண்டு, என்பது பல மொழி. அதாவது கல் தடுக்கி ஒரு பாறையில் மண்டை மோதி பிழைத்தவனும்உண்டு, புல் தடுக்கி தரையில் விழுந்து இறந்தவனும் உண்டு என்று அர்த்தம். மரணம் என்பது வர வேண்டிய நேரத்தில் சரியாக வரும், ஆனால் அது எப்போது வரும், எப்படி வரும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அந்த ரகசியம் மட்டும் மனிதனுக்கு தெரிந்தால் இந்த உலகம் என்னாகும் என்பது சற்று சிந்தித்து பாருங்கள். என்னென்ன கொடுமையான காரியங்கள் நடக்கும் என்று.
கோடி கோடியாக காசு இருக்கலாம். பெரிய பெரிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதற்கு வசதி இருக்கலாம். ஆனால் இறைவன் கணக்கை முடிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் கோடிகளாலும் எந்த திறமையான மருத்துவராலும் போகின்ற உயிரை தடுத்து நிறுத்த முடியாது. அதுதான் இறைவன் வகுத்த நிய.தி. இந்த உண்மையை புரிந்து கொண்டால் கவலை என்பதற்கு வேலையே இல்லை. 

கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனதுதான். இங்குதான் மனித இனத்திற்கு வேதனையை தரக்கூடிய கவலைகள் உற்பத்தி செய்யபடுகின்றன. இந்த கவலைகளின் மூல பொருள் நினைவுகள். நினைவுகள்தான் ஒருவரின் கவலைக்கு முக்கிய காரணம். அந்த நினைவுகளை கட்டுபடுத்தி விட்டாலே கவலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நினைவுகளை கட்டுபடுத்தும் சக்தி தியானம் என்னும் அறிய கலைக்கு உண்டு.

நினைவுகளை  அலசி ஆராய்ந்து எது உண்மை, எது பொய் என்று பாகுபடுத்தும் தன்மை தியானத்திற்கு அதிகம் உண்டு. நினைவுகளை அலசும்போது “ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் ஒரு வழியை உபயோகபடுத்திதான் ஆக வேண்டும். நடந்து செல்லவேண்டும் அல்லது ஏதாவது ஒரு வாகனத்தில் சென்றுதான் ஆக வேண்டும், விபத்து நடக்கிறது என்று வீட்டுக்குள்ளேயே இருந்தால் என்ன நடக்கும்?” என்று ஒருவரை உணரசெய்யும்.

இதுபோன்று எத்தனையோ பயத்திர்க்குண்டான பொய்யான காரணங்களை தியானம் உணரசெய்து, தேவையில்லாத பயத்திலிருந்து இருந்து விடுதலை அடைய செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.    

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள