பிராணயமம் பயிற்சி மூலம் நீண்ட நாள் உயிர் வாழ முடியுமா?

மூச்சை விட மறந்தால் நிச்சயமாக நீண்ட நாள் உயிர் வாழலாம்.

என்ன இது வித்தியாசமாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா?

உண்மைதான். மூச்சு விடாமல் இருந்தால் இந்த உலகத்தில் நீண்ட நாள் உயிர் வாழலாம்.

மூச்சு என்பது மனித உயிர்களுக்கு இன்றியமையாதது ஆகும். உணவில்லாமல் கூட ஒரு சில நாட்கள் உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் மூச்சு விடாமல் இருப்பது என்பது இறந்த உயிருக்கு சமானம்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கை காலம் அதாவது அவன் இந்த உலகத்தில் எத்தனை நாள் உயிர் வாழ்வான் என்பது அவன் உள் இழுத்து வெளியில் விடும் மூச்சை பொறுத்தது.

ஒரு மனிதனுடைய ஆயுள் காலம் அவன் உள் இழுத்து வெளியில் விடும் மூச்சின் வேகத்தை பொருத்தது.

பொதுவாக மனிதர்கள் ஒரு நிமிடத்தில் 16 தடவை மூச்சை உள் இழுத்து வெளியில் விடுகின்றனர். இதே மூச்சை இன்னும் குறைவாக அதாவது
8 தடவை உள் இழுத்து வெளியில் விடும்போது ஒருவருடைய ஆயுள் காலத்தில் 2 நிமிடங்கள் அதிகரிக்க படுகின்றன. குறைவான தடவை மூச்சை உள் இழுத்து வெளியில் விட்டாலும் உடம்புக்கு தேவை ஆன சத்துக்கள் உடலுக்கு செல்வதில் எந்த தடையும் இருக்காது.

அவசர அவசரமாக மூச்சை உள் இழுத்து வெளியில் விடுவதில் உடலுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை மாறாக உடல் நல கேடுதான்  மிஞ்சும். நல்ல ஆழ்ந்து மூச்சு விடும்போது உடல் நலத்திற்கும் ஆயுளுக்கும் பாதகம் இல்லை. ஆழ்ந்து மூச்சு விடும்போது நாள் பட்ட வியாதிகள் கூட குணமாகிறது என ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

இது போன்று நம்முடைய மூச்சை சிறிது கட்டுபடுத்தினால் நலமுடன் வாழலாம். நீண்ட நாட்கள் உயிர் வாழலாம்.

அதற்குண்டான   அருமையான ஒரு பயிற்சியை நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்து வளமுடனும், நீண்ட நாட்களும் உயிர் வாழ்ந்துள்ளனர். அதுதான் பிராணயமம் எனப்படும் மூச்சு பயிற்சி.

மூச்சை மிச்சபடுதினால் நீண்ட நாள் உயிர் வாழலாம் என்பதற்கு சில உதாரணங்கள்.

ஆமை ஒரு நிமிடத்தில் 5 முறை மட்டும் மூச்சை உள்ளே இழுத்து வெளியில் விடுகிறது. அதனால் அதனுடைய வாழ்நாள் 100 வருடங்களுக்கு மேல் என்று கூறபடுகிறது.

முயல் ஒரு நிமிடத்தில் 38 லிருந்து 39 தடவை ஒரு நிமிடத்தில் மூச்சை உள் இழுத்து வெளியில் விடுகிறது அதனால் அதனுடைய வாழ் நாள் 10 வருடம் மட்டும்தான் என்று கூறப்படுகிறது.

பூனை ஒரு நிமிடத்திற்கு 23 முதல் 24 தடவை மூச்சை உள்  இழுத்து வெளியில்  விடுகிறது. அதனால் அதனுடைய வாழ் நாள் 12 வருடங்கள் மட்டுமே.

நாய் ஒரு நிமிடத்திற்கு 28 முதல் 29 நிமிடங்கள் வரை மூச்சை உள் இழுத்து வெளியில் விடுகிறது. அதனால் அதனுடைய வாழ் நாள் 15 வருடங்கள் மட்டுமே.

முற்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் அமைதியான ஆரவாரம் இல்லாத வாழ்ந்து கொண்டு இருந்தனர். அதனால் அவர்கள் ஒரு நிமிடத்திற்கு 11 லிருந்து 12 தடவை மட்டும் மூச்சை உள்  இழுத்து வெளியில் விட வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் அவர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தார்கள். 

ஆனால்  இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் நாம் நிமிடத்திற்கு 16 தடவையும் அதற்கும் மேலும் மூச்சு உள் இழுத்து வெளியில் விட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதனால் இப்போது மனிதர்களின் வாழ் நாள் 
குறைந்து விட்டது.

வேகமாக மூச்சை உள் இழுத்து வெளியில் விடும்போது உடலில் இரத்த ஒட்டத்தின் வேகமும் அதிகரிக்கின்றது. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது மனிதர்களின் வாழ்நாளும் குறைக்கபடுகின்றது.      

நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கு குறைவாக மூச்சை உள் இழுத்து அதிக நேரம் தக்க வைத்து பிறகு வெளிவிட வேண்டும். இதற்க்கு தகுந்த பயிற்சி எடுத்து கொண்டால் ஒருவருடைய ஆயுள் அதிகமாகும் என்று கூறலாம். அந்த பயிற்சிதான் பிராணயமம்  எனப்படும் மூச்சு பயிற்சி. 

நாம் நடக்கும்போது 8 தடவை மூச்சை உள் இழுத்து 12 தடவை வெளி விடுகிறோம். அதனால் 4 தடவை அதிக மூச்சை வெளிவிட்டு நம் ஆயுளை குறைக்கிறோம். 

ஓடும்போது 27 தடவை மூச்சை உள் இழுத்து 54 தடவை மூச்சை வெளி விடுகிறோம். அதனால் 27 தடவை அதிக மூச்சை வெளிவிட்டு நம் ஆயுளை குறைக்கிறோம். 

தூங்கும்போது 30 தடவை மூச்சை உள்  இழுத்து 48 தடவை மூச்சை வெளி விடுகிறோம். 

சமைக்கும்போது 20 தடவை மூச்சை வெளிவிட்டு 10 தடவை மூச்சை உள் இழுத்து 10 தடவை மூச்சை அதிகம் வெளியிடுகிறோம்.   

சண்டை போடும்போது 24 தடவை மூச்சை வெளிவிட்டு 12 தடவை மூச்சை உள்
இழுக்கிறோம் அதனால் 12 தடவை மூச்சை அதிகம் செலவிடுகிறோம். 

உடல் உறவின்போது  64 தடவை மூச்சை வெளிவிட்டு 24 தடவை மூச்சை உள் இழுக்கிறோம். அதனால் 40 தடவை மூச்சை வீணடிக்கிறோம். 

வரவுக்கு மிஞ்சி செலவு செய்தால் எப்போதுமே ஆபத்துதான். மூச்சும் அதே போன்றுதான் உள் இழுக்கும்போது உடலுக்கு வரவு. வெளியில் விடும்போது 
உடலுக்கு செலவு. செலவை கட்டுபடுத்தினால் நீண்ட நாள் உயிர் வாழலாம்.     

எனவே பிராணயமம் என சொல்லப்படும் மூச்சு பயிற்சியை தினசரி செய்து வந்தால் மூச்சினை மிச்சப்படுத்தி நீண்ட நாட்கள் உயிர் வாழலாம். 

பிராணயமம் எனும் மூச்சு பயிற்சியை செய்வதற்கு சில முறைகள் உள்ளன. 
எனவே அனுபவம் உள்ள ஒரு ஆசிரியர் மூலம் கற்று  கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பிராணயமம் எனும் மூச்சு பயிற்சி செய்வதற்கு ஜாதி, மதம், இனம்  வயது என்ற பாகுபாடு கிடையாது. 
   
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள