தியானம் மகிழ்ச்சியாக வாழ செய்யுமா?

இருக்கும் வியாதிகளிலேயே மிகவும் கொடுமையான வியாதியே மனிதனின் மன வியாதிதான். மன வியாதி மட்டும்தான் ஒரு மனிதனை முடக்கி போட்டு மூலையில் உட்கார வைக்கும் சக்தி கொண்டது. எதையும் உருப்படியாக சிந்திக்க விடாது. உருப்படியாக பேச விடாது. உருப்படியாக செய்ய விடாது. எதை செய்தாலும் அதில் தவறு. எதை பேசினாலும் அதில் தவறு. எதையும் தவறாக சிந்திக்க செய்யும்.

ஒருவருக்கு மன வியாதிகள் உருவாகுவதற்கு பல காரணம் உண்டு. அவற்றில் ஒரு முக்கிய காரணம் உலக இயல்புகளுடன் ஒத்து செல்லாமை அல்லது ஏற்று கொள்ளாமை.

உலக இயல்புகளுடன் ஒத்து செல்லாதபோது உடல்ரீதியாக ரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற பல வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
உலக இயல்புடன் ஒத்து செல்லாதபோது அடுத்து ஒரு மனிதனை பாதிக்க செய்வது கவலை. எப்போதும் நடக்கும் அல்லது நடக்காமலும் போகக்கூடிய நிகழ்சிகளை நினைத்து கவலை பட்டு கொண்டு இருப்பது. உதாரனத்திற்க்கு சாலையில் நடக்கும் விபத்துகளை நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்தால் சாலையில் பயணிக்க முடியுமா? கவலைபடுவதினால் விபத்துக்கள் நடக்காமல் இருக்க போவதும் இல்லை அதே சமயத்தில் தொடர்ந்து நடந்து கொண்டும் இருப்பதில்லை.

ந்த கவலைகளே பின் பயமாக மாறிவிடும். இந்த பயத்தினாலும் கவலையினாலும் பாதிக்கபடுவது எது என்றால் ஒருவருடைய உடல் அவயங்கள்தான்.

ஆம். கவலையினால் உண்டாகும் பயம் நரம்பு மண்டலங்களை பாதித்து பல வித பக்க விளைவுகளை உண்டாகுகிறது. பல வியாதிகளின் மூல காரணமே ஒருவருடைய  பயமாகத்தான் இருக்கும்.

ஒரு சிலர் என்னுடைய மகன் சரியாக படிக்க மாட்டேன் என்கிறான், என்னுடைய மகள் சரியாக படிக்க மாட்டேன் என்கிறாள் என்று அந்த இளம் பிஞ்சுகளை பாடாய் படுத்துகிறார்கள். பிள்ளைகளை மார்க் எடுக்கும் ATM machine ஐ போல நினைக்கிறார்கள். ATM machine ஐ அளவுக்கு அதிகமாக துன்புறுத்தினால் machine கெட்டுவிடும் அதாவது பிள்ளைகள் மன நோயாளியாகி விடுவார்கள். முதலில் உங்கள் குழந்தையின் ஆசை என்ன, ஆர்வம் என்ன என்று தெரிந்து அந்த துறையில் அதை வளர்க்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து உங்கள் ஆர்வத்தை அதனிடத்தில் திணிக்காதீர்கள்.

எல்லோரும் படித்து வேலைக்கு சென்று விட்டால் மற்ற வேலைகள் எல்லாம் யார் பார்ப்பது. கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் படித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டால் வயல் வேலையை யார் செய்வது? இன்றும் கிராமங்களில் உள்ள பெரிய பிரச்சனயே கூலிக்கு வேலை செய்ய ஆள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. இப்படி இருந்தால் உணவு உற்பத்தி எப்படி ஆகும்? இது போன்ற நிலைமை நீடித்தால் பிறகு உணவு பொருள்களை அயல் நாடுகளில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை வரும்? அந்நிய செலவாணி அதிகமாகும்?

கோயில்  நகையை விற்று அந்நிய செலவாணி கையிருப்பை சரி செய்யலாமா, என்று அரசாங்கம் யோசனை செய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலைமையில் மனிதர்கள் அன்றாடம் சாப்பிடும் கோதுமையையும் அரிசியையும் இறக்குமதி செய்து சாப்பிட்டால்தான் உண்டு என்ற நிலமை வந்தால் என்ன ஆவது?

எல்லோரும் படித்து வேலைக்கு சென்று விட்டால் வியாபாரத்தை யார் செய்வார்கள்?

படிக்கும் திறனை வைத்து ஒருவரை அறிவாளி என்றோ முட்டாள் என்று தீர்மானித்தால் அதனால் பாதிக்க படுவது சமுகம் மட்டுமே. எல்லோரும் படித்து வேலைக்கு சென்று விட்டால் மற்ற வேலைகள் எல்லாம் யார் பார்ப்பது.

எனவே சிலருக்கு நல்ல படிப்பு இருப்பதும் சிலருக்கு இல்லாமல் இருப்பதும் அல்லது சுமாரான படிப்பு இருப்பதும் உலக நியதியாகும். உலகின் சம நிலையை நிலை நிறுத்துவதற்காக இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நியதி, உண்மை.எல்லா செயல்களும் தங்கு தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக இயற்கையால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முறை.

எனவே இந்த சமுகத்தில் படித்தவர்களும் படிக்காதவர்களும் இரு கண்கள் போன்றவர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவர் அல்ல.

கூச்சம் இன்றி அன்றாடம் செய்யும் சுகாதார பணியினை ஒரு சுகாதார பணியாளர் மட்டுமே செய்ய முடியும். நான் படித்துள்ளேன் என கெளரவம் பார்க்கும் யாரும் அந்த சுகாதார பணியினை மனம் சகித்துக்கொண்டு செய்ய முடியாது.

எனவே ஒருவருக்கு படிப்பு அறிவு இல்லை அல்லது படிப்பு சரியாக வரவில்லை என்று அவரை ஒதுக்கி தள்ளகூடாது. உலக இயல்பு என்று இயற்கையுடன் ஒத்து செல்ல வேண்டும்.

ஒரே குடும்பத்தில் இரு பிள்ளைகள் இருப்பார்கள். ஒரு குழந்தை நன்றாக படிக்கும். யாருடைய துணையும் இல்லாமல் அல்லது யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் படித்து நன்றாக மார்க் எடுத்து முதல் நிலையில் இருக்கும். இன்னொரு குழந்தை படிப்பில் சோர்வாக இருக்கும், எதையும் சற்று தாமதமாக புரிந்து கொள்ளும், அல்லது மனதில் நிறுத்தி வைக்கும் திறன் சற்று குறைவாக இருக்கும். இது அவர் அவர் உடல் கூறுகளை பொருத்தது. ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு பார்த்தால் அந்த குழந்தைகளின் மனதை ஊனம் தான் ஆக்க முடியும். அந்த தவறை எந்த பெற்றோரும் செய்யாதீர்கள்.
  
உலகில் படைக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்படும் எந்த ஒரு பொருளும் ஒரே மாதிரியாக இருக்காது. வாகனங்களை எடுத்து கொண்டீர்கள் என்றால் ஒரே கம்பெனியில் தயாரிக்கப்பட்ட மோட்டார் பைக் களில் ஒரு brand மோட்டார் பைக் மக்களிடையே நல்ல வரவேற்ப்பு இருக்கும். அதே கம்பெனியில் தயாரிக்கப்பட்ட மற்றொரு brand மோட்டார் பைக்கிற்கு வரவேற்ப்பு இருக்காது. இரண்டையும் ஒரே கம்பெனியில்தான் தயார் செய்கிறார்கள். ஒரு பைக்கிற்கு வரவேற்ப்பு இருக்கிறது, மற்றொன்றுக்கு வரவேற்ப்பு இல்லை.

ஏனென்றால் படைப்பதற்கு காரணமான மனிதர்கள் வேறு வேறாக அல்லது படைக்கும்போது சூழ்நிலைகள் வேறு வேறாக இருக்கலாம். இது இயற்க்கை நியதி.

ஒரு கவிஞன் படைக்கும் அத்தனை படைப்பும் மக்களுக்கு பிடிக்கும் என்று கூறமுடியாது. கவிதை படைக்க வேண்டும் என்ற நோக்கம் ஒன்றாக இருந்தாலும் படைப்பு வித்தியாசமாக இருக்கின்றன. பிடித்ததையும் அதே கவிஞன் தான் எழுதுகிறான். பிடிக்காமல் போனதையும் அதே கவிஞன் தான் எழுதுகிறான். இது இயற்க்கை நியதி.

எந்த படைப்பாக இருந்தாலும் தோற்றத்தில் ஒற்றுமை இருந்தாலும் விளைவுகளில் குறை இருக்கத்தான் செய்யும். இது உலக நியதி. இயற்கையின் சட்டம். அதை அனுசரித்துதான் நாம் செல்ல வேண்டும். அப்போதுதான் நாம் மகிழ்ச்சியாக வாழமுடியும்.

சரி. இயற்க்கை நியதி. உலக இயல்பு. இதையெல்லாம் நாம் எப்படி ஏற்று கொள்வது அல்லது நம்மை எப்படி தயார் படுத்தி கொள்வது?  

உங்களுடைய மனது அதை ஏற்றும் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். உங்கள் மனதை ஏற்று கொள்ளும் நிலையில் செய்வதற்கு தியானம் போன்ற கலைகளின் மூலம் உங்கள் மனதை உங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வரலாம்.

மனம் என்பது ஒரு தறி கெட்ட குதிரை போன்றது. அதை சரியாக உங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வர செய்வதற்கு தியானம் போன்ற கலைகளை சார வேண்டும். அப்போதுதான் உலக இயல்புகளையும், இயற்க்கை விதிகளையும் ஏற்று கொள்ள செய்யும் மனப்பான்மை வளரும்.    

மனது சரியான நிலைக்கு பழக்கபடுத்தி விட்டால் பின் உலக இயல்புகளுடன் ஒத்து செல்லும் மனப்பான்மை இலகுவாகிவிடும், பின் அங்கு சந்தோசம் என்பதற்கு குறைவு இருக்காது, மகிழ்ச்சியுடன் வாழலாம்  என்பதில் சந்தேகம் இல்லை.