தியானத்தின் மூலம் மன அமைதி கிடைக்குமா?

இந்த உலகத்தில் வாழும் பெரும்பான்மையினர் இந்த மன அமைதி இல்லாமல் பைத்தியம் பிடித்தாற்போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மன அமைதி இல்லாமைக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.

பிழைப்பு தேடி  ஊர் விட்டு ஊர் அல்லது நாடு விட்டு நாடு சென்று சம்பாதிப்பர்வர்களுக்கு கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் விட்டு விட்டு பணம் நிறைய கிடைத்தால் கூட அவர்கள் முகத்தை அன்றாடம் பார்க்க முடியாமல், அவர்களுடன் பேச முடியாமல் மன அமைதியின்றி தவிப்பவர்கள் ஏராளம்.

காசு பணம் சம்பாதிப்பதற்காக நேரமே இல்லாமல் தொழிலுக்கு மேல் தொழில் தொடங்கி வீட்டிலிருக்கும் மனைவியையும், பிள்ளைகளையும் மறந்து அவர்களுடன் சந்தோசமாக இருக்க முடியாமல் மன அமைதியின்றி அல்லல் படுபவர்கள் எத்தனையோ  பேர்.

நமக்கு தெரிந்த எத்தனையோ தொழில் அதிபர்கள் இருக்கின்றனர். காசு க்கு கவலை கிடையாது. சொன்ன வேலையை செய்ய கை கட்டி கொண்டு சேவகம் செய்ய எத்தனையோ பேர். ஆனால் மன அமைதி என்பது அவர்களுக்கு இருக்குமா? அங்கு என்ன நடந்ததோ, இங்கு என்ன நடந்ததோ, அவரை பார்த்து இந்த பிரச்சனைக்கு முடிவு செய்ய வேண்டும், இந்த சொத்து நமக்கு சாதகமாக வருமா? கோர்டில் தீர்ப்பு எப்படி வரும்? இவ்வளவு பிரச்சனைகள் இருந்தால் அப்புறம் எங்கு மன அமைதி இருக்கும்.

இப்படியே மன அமைதி இல்லாமல் இருந்தால் அது பல வித மன உளைச்சல்களுக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.

முக்கியமாக தூக்கமின்மைக்கும், blood pressure, diabetes போன்ற வியாதிகளுக்கும் வழி வகுக்கும்.

சரி, இது போன்று மன அமைதியின்மையால் உருவாகும் வியாதிகளுக்கு  தியானத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா?

தொடர்ந்து தியான பயிர்ச்சி செய்யும்போது தேவை இல்லாத மன குழப்பங்களுக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும். தியானம் செய்யும்போது மூளையின் அலைகள் ஒழுங்குபடுத்தபடுவதால் மன அமைதின்மைக்கு உண்மையான காரணத்தை ஆராய்ந்து சரியான முடிவு எடுக்க வழி கிடைக்கும்.

இதயத்திற்கு சரியான ஓய்வு கிடைக்கும்போது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடைக்கின்றது. ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கும்போது பிளட் பிரஷர் சரியான அளவில் இருக்கும். கவலைகள் இல்லாத நிலை உருவாகுவதால் diabetes போன்ற வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். இவை அனைத்தும் தியானம் செய்வதால் கிடைக்கின்றன என்று பல ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே ஒருவர் தியானத்தை தொடர்ந்து செய்து வரும்போது மனம் சார்ந்த மன அமைதி மற்றும் அதன் விளைவுகளில் இருந்து நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.
  
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள