மன குழப்பங்களில் இருந்து எப்படி விடுதலை பெறுவது?

இன்று பெரும்பான்மான்மையானவர்கள் அவதி படுவதே இந்த மன குழப்பம் என்னும் மன வியாதிதான்.

மன குழப்பம் என்பது அவர் அவர்கள் வயதை பொருத்தது. படிக்கும்

மாணவர்களிடையே படிப்பை பற்றிய குழப்பம். எதை படிப்பது? எதை விடுவது? என்று.

இளைஞர்களிடம் எதிர்கால வாழ்க்கையை பற்றிய குழப்பம். நல்ல வேலை கிடைக்குமா?  நல்ல திருமணம் அமையுமா? காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா? என்று.

வேலைக்கு செல்பவர்களிடையே இந்த உத்தியோகத்தில் நாம் நீடித்து நிற்க முடியுமா? அதிகாரியை நம்மால் அனுசரித்து செல்ல முடியுமா? பதவி உயர்வு கிடைக்குமா அல்லது நின்று போகுமா என்று?

பெரியவர்களிடத்தில் நம் குடும்ப கஷ்டம் தீருமா அல்லது இப்படியே தொடருமா? பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையுமா? வாழ்க்கை துணைக்கு உடல் நிலை எப்போது சீராகும்? என்று.

இது போன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன கவலைகள் குழப்பங்கள்.

இந்த மன கவலைகளும் மன குழப்பங்களும் ஒருவரையும் நிம்மதியாக இருக்க விடாது.

எப்போது பார்த்தாலும் டென்ஷன் ஆன சூழ்நிலை. யாரிடத்திலும் கோபமாக பேசும் பாங்கு. தவறாக முடிவெடுத்து அவஸ்திபடுவது.

மன குழப்பங்களினால் அவதி படுவதற்கு காரணம் என்ன?

நடக்க கூடாத ஒன்றை நினைத்து நடந்து விடுமோ என்று பயப்படுவது.
உதாரனத்திற்க்கு ரயில்வே தண்டவாளத்தை கடந்தவர் ரயிலில் அடிபட்டு சாவு என்ற செய்தியை பார்த்து விட்டு ஐயோ நம்முடைய கணவரும் வேலைக்கு செல்லும்போது அவரும் அடிபட்டு செத்து விடுவாரோ என்று பயப்படுவது, அப்படி செத்து விட்டால் நம் பிள்ளைகளை யார் கவனிப்பது, நம்மை யார் பார்த்து கொள்வார்கள் என்று தேவை இல்லாமல் பயப்படுவது.
காரணமே இல்லாமல் உருவாகும் இந்த பயம் ஒவ்வொரு நாளும் தேவை இல்லாத மன குழப்பத்திற்கு காரணமாகும்.

இது போன்று எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.

மன குழப்பங்கள்  உருவாகும் இடமே ஒருவரது மனதுதான்.

மனம் என்பது எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கும். ஒரு நிகழ்வை நல்லவிதமாகவும் சிந்திக்கும். தீய விதமாகவும் சிந்திக்கும்.

நல்லவித மாக சிந்திக்கும்போது மனிதன் நல்ல செயல்களை செய்கிறான். நல்லவன் என பெயர் எடுக்கிறான். அதே நல்ல மனிதன் தீய விதமாக சிந்திக்கும்போது கெட்டவன் என பெயர் எடுக்கிறான். கெட்ட செயல்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகிறான்.

மனது சரியாக சிந்திக்க தவறும் போது அதன் விளைவு தன்னம்பிக்கை இழத்தல், பயம் மற்றும் மன குழப்பங்கள்.

ஒருவரை பண விசயமாக சந்திக்க போக வேண்டும். போவதற்கு முன்பே அவரை பார்த்தால்  பணம் கிடைக்குமா என்று நினைத்தால் அங்கு உருவாகுவது தன்னம்பிக்கை இழத்தல். தன்னம்பிக்கை இழந்ததால் அங்கு உருவாகுவது பயம். பயம் உருவானதால் அங்கு விளைவது மன குழப்பம்.

இன்னும் அவரை சென்று பார்க்கவே இல்லை, அதற்குள் மன குழப்பம்.

இருந்த போதிலும் நம்பிக்கை இல்லாமல், ஒரு மன குழப்பத்துடன் அவரை  சென்று பார்க்கிறார். இவர் எதிர்பார்ப்புக்கு மேலே இவர் கேட்ட தொகையை அவர் தர சம்மதிக்கிறார்.

அப்போ இதுவரையில் பணமே கிடைக்காது என்று தேவை இல்லாத பயம் மற்றும் மன குழப்பத்தில் அவஸ்தை பட்டது தேவை இல்லாததுதானே?

இதுபோன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தேவை இல்லாத பயத்தில் அவஸ்தை பட்டு மன குழப்பத்தில் அவதிபடுபவர்கள் ஏராளம்.

சரி, இது போன்று தேவை இல்லாத மன குழப்பங்களில் இருந்து விடுதலை பெற தியானம் உதவி புரியுமா?

ஆம், மனகுழப்பங்களில் இருந்து விடுபடுவதற்கு தியானம் உதவி புரிகிறது என்றால் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

காரணம் தியானம் என்பது மனதிற்கு
வைத்தியம் செய்யும் ஒரு டாக்டர் ஐ போன்றது. தியானம் பழகும்போது
உண்மை எது பொய் எது என்று தெள்ள தெளிவாக விளங்க செய்யும். உண்மை எது பொய் எது என்று தெள்ள தெளிவாக தெரியும் போது இது நடக்காது, இது நடந்தால் என்ன ஆகும் போன்ற பொய் சிந்தனைகளுக்கு இடமே இல்லை.

பொய் சிந்தனைகளுக்கு இடம் இல்லை என்கிறபோது அங்கு பயம் இல்லை. தன்னம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. பயமும் தன்னம்பிக்கையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லாத போது அங்கு மன குழப்பத்திற்கு இடமே இல்லை.
               
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள