தியானத்தின் மூலமாக கவலைகள், ஏமாற்றங்களில் இருந்து விடுதலை பெற முடியுமா?


கவலை என்பது மனிதர்களிடையே காணப்படும் மிக மோசமான வியாதியாகும்.  இந்த கவலை என்பது நாமாகவே தேடி கொள்வதுதான் அல்லது எற்படுத்தி கொள்வதுதான்.

எந்த மனிதனும் பிறக்கும்போது கவலைகளுடன் பிறப்பதில்லை. உங்கள் வீட்டில் உள்ள சின்ன குழந்தைகளை பார்த்தாலே தெரியும். அவர்களுக்கு எந்த கவலையும் கிடையாது. இன்றைய பொழுது எப்படி போகப்போகிறது? இன்று செலவுக்கு என்ன செய்ய போகிறோம்?  போன்ற கவலைகள் எல்லாம் அவர்களுக்கு கிடையாது.

இந்த உலகத்தில் அதிக நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்றால் எதை பற்றியும் கவலை படக்கூடாது. நடக்காத ஒன்றை நினைத்து நடந்து விடுமோ என்பதுதான் பெரும்பாலானவர்களின் கவலையே. ஆனால் இவர்கள் எதை நினைத்து நடந்து விடுமோ என்று கவலை பட்டார்களோ அவை பெரும்பாலும் நடப்பதில்லை. அதுதான் உண்மை. உங்கள் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்சிகளை நினைத்து பார்த்தீர்கள் என்றாலே எந்த உண்மை புரியும்.       

ஒருவருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகளை உண்டாக்குவதற்கு கவலைகளும் ஒரு காரணமாகிறது. முக்கியமாக ஒருவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் , சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கும் தேவையில்லாமல் கவலை படும் பாங்கும் முக்கிய காரணமாகிறது. இதற்க்கு சான்றே உங்கள் அருகாமையில் இருக்கும் பலரை பார்த்தாலே தெரியும்.

கவலைகள்  என்பது குடியிருக்கும் இடமே ஒருவருடைய மனதுதான். இந்த மனதில் வாடகைகொடுக்காமல் அழையா விருந்தாளியாக குடி இருந்துகொண்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதே இந்த கவலைகள்தான். பிரச்சனைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருக்கலாம்.    

கவலைகளினால் பெரும்பாலும் பாதிக்கபடுவது தூக்கம் தான். கவலைகள் நிறைந்த ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சனை. கண்ணை மூடினால் கவலைகள்தான்  முன் நிற்கும்.  ஒருவருடைய தூக்கம் கெடும்போது அவருடைய ஆரோக்கியமும் பல விதத்திலும் பாதிக்கப்படும். கோபம், எதையும் அவசரமாக யோசனை இல்லாமல் செய்வது,
 tension, blood pressure, diabetes போன்ற பல வியாதிகளுக்கும் தூக்கமின்மையே  காரணமாகிறது.

அடுத்து கவலைகளுக்கு முக்கிய காரணம் ஏமாற்றம். நடக்க முடியாத ஒரு விஷயத்தை நினைத்து அது நடக்க வில்லை என்கிறபோது என்ன நடக்கும். ஏமாற்றம்தான். சந்திர மண்டலத்துக்கு போகலாம் என்ற ஆசை இருக்கலாம் ஆனால் போகமுடியவில்லை என்று நினைத்தால் மிஞ்சுவது கவலையும், ஏமாற்றமும்தான்.

சரி இந்த கவலைகளை ஒழிக்கவே முடியாதா?  நிச்சயம் முடியும்.

ஏற்கனவே மேலே கூறியவாறு இந்த கவலைகளின் குடியிருப்பு ஒருவருடைய மனதுதான். அந்த மனதில் இருந்து கவலைகளையும் ஏமாற்றங்களையும்  விரட்டி விட்டோம் என்றால் அது இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.  கவலைகளை விரட்டுவதற்கு vaccum cleaner போன்ற ஒரு கருவி வேண்டும். அந்த கருவியின் துணை கொண்டுதான்  மனதில் படிந்து ஓட்டடைகலாக தொங்கி கொண்டு இருக்கும் கவலைகளை நீக்கி சுத்தமாக வைத்துகொள்ளலாம்.

ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே vaccum cleaner  ஐ விட சக்தி வாய்ந்த சுத்தம் செய்யும் கருவி அவர்களுடைய உடலிலேயே உள்ளது. அதன் உதவி கொண்டு மனதில் உள்ள கவலைகளை  சுத்தம் செய்து மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழலாம். அப்படி என்றால் அது என்ன கருவி?

ஆம், அந்த கருவி உங்களது மனதுதான். இந்த மனது என்னும் vaccum cleaner ஐ இயங்க செய்வதற்கு உரிய கருவி ஒன்று தேவை. அதுதான்  தியானம். தியானத்தின் துணைகொண்டு மனதை சுத்தம் செய்யும் போது தேவை இல்லாத கவலைகள் மனதில் இருந்து சுத்தம் செய்ய படுகின்றன. தேவை இல்லாத ஏமாற்றங்கள் மனதில் இருந்து விரட்டபடுகின்றன.

எப்படி கவலைகளும் ஏமாற்றங்களும் மனதிலிருந்து தியானத்தின் துணை கொண்டு விரட்டபடுகின்றன. எந்த ஒரு விசயத்தையும் ஆழ சிந்திக்கும்போது தான் அங்கு கவலைகள், ஏமாற்றங்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளின் உண்மையான காரணத்தை  அறிந்து கொள்ளும்போது அங்கு ஏமாற்றம், கவலைகள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதற்க்கு தியானம் பெரிதும் உதவும். தியானம் என்பது மனிதர்களின் மூளை அலைகளை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து ஒருவரை சரியாக சிந்திக்க செய்கிறது. அப்படி சிந்திக்கும்போது சந்திர  மண்டலம் போகலாம் என்று ஆசை படுவதில் தவறில்லை ஆனால் போக முடியவில்லையே என்று ஏமாற்றம் அடைந்து அதை நினைத்து கவலை பட கூடாது, ஏமாற்றம் அடைய கூடாது என்று மனதின் மூலமாக  உணர்த்துவது தியானம் தான்.

தியானம் பழகும் போது மூளை அலைகளில் ஏற்படும் மாற்றங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று பல ஆராய்சிகள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கின்றன. இந்த மாற்றங்கள்தான் கவலைகள், ஏமாற்றங்கள் எல்லாம் ஒரு மாயை, பொய்,  அதற்கென்று தனி உருவம் கிடையாது என்று ஒரு மனிதனை உணர செய்கின்றது. 

எனவே மனிதர்களுக்கு துன்பத்தை கொடுக்கும் கவலைகளையும், ஏமாற்றங்களையும் தியானம் என்னும் அறிய கலை மூலம் மனதில் இருந்து விரட்டி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்  சந்தோசமாக இருக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. 
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள