உங்களிடம் இருக்கும் ஆற்றலை உணரசெய்யும் தியானம்

 உங்களிடம் இருக்கும் ஆற்றல் அணுசக்தியை விட வலிமையானது. அணுசக்தியை பற்றி தெரிய வேண்டுமென்றால் இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட  ஜப்பானை இன்றளவும் மக்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதனுடைய சக்தியை பற்றி சொல்லி தெரிய  வேண்டியதில்லை. ஆக்க பூர்வமான வேலைகளுக்கும் அணுசக்தி உபயோகமாகிறது. மின்சாரம் தான் அதற்க்கு சரியான உதாரணம்.

ஆனால் உங்களிடம் இருக்கும் ஆற்றல் சக்தி அனுசக்தியைவிட பல நூறு பல ஆயிரம் மடங்குகள் உயர்வானது. உங்கள் மூளையே இதற்க்கு நல்லதொரு சான்று. நாம் அனைவரும் நம்முடைய மூலையில் 5 சதவீதம் மட்டுமே உபயோகபடுத்துகிறோம். இந்த உலகத்தில் பெரிய பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் முதற்கொண்டு ஒரு சிறிய அளவிலான மூளையின் பாகத்தை மட்டுமே உபயோகபடுத்தி உள்ளனர். முழு அளவிலும் அவர்கள் தங்களுடைய மூளையை பயன் படுத்தி இருந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்திருக்கும். அந்த அளவிற்கு மனிதர்கள் ஆற்றல்கள் உடையவர்கள்.

உங்களுடைய  ஆற்றல்களை கொண்டு உங்களுடைய வெற்றிக்கு நிச்சயமாக உபயோகிக்கலாம்.   

ஆனால் ஆற்றல்கள் இருந்தும் அதைபற்றி அறியாமல் அல்லது தெரியாமல்
இருப்பதின் காரணம் என்ன? காசு இருந்தும் ஏழையாக இருப்பதின் காரணம் என்ன? மாடி வீட்டு ஏழை போல் இருப்பது ஏன்?

காரணம் உங்கள் மனதுதான். உங்கள் ஆற்றல்களை உங்களுக்கே தெரிய செய்யாமல் இருப்பதற்கு காரணம் உங்கள் மனதில் தேங்கியுள்ள குப்பைகள்.
குப்பைகள் என்றால் தேவை இல்லாத நினைவுகள், பொறாமை, கவலைகள்,
கோபம் போன்ற இன்னும் எண்ணற்றவை. இவைகள் அனைத்தும் குப்பைகள் போல தினசரி கூடி கொண்டே இருப்பதால் உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் உங்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது அல்லது நீங்கள் அறிவதில்லை.

ஒரு பழைய தமிழ் பாடல் ஒன்று உண்டு.

"உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் 

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 

தலை வணங்காமல் நீ வாழலாம்   


மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா

தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா  


பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா 

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா 


மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு 

மாலைகள் விழவேண்டும் - ஒரு 

மாசு குறையாத மன்னவன் இவனென்று 

போற்றிப் புகழ வேண்டும் 


உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் 

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 

தலை வணங்காமல் நீ வாழலாம் "
உங்களை நீங்கள் அறிந்தால் உங்கள் ஆற்றலை நீங்கள் அறிவதற்கு உங்கள்
மனதை சரி செய்யவேண்டும் அல்லது உங்கள் மனதை பழக்கவேண்டும்.

மனதை பழக்க வேண்டும் என்பது ஒரு சாதாரண மான விஷயம் அல்ல. ஏனென்றால் மனது ஒரு இடத்தில நிலையாக இருக்காது. அங்கும் இங்கும் தாவி கொண்டே இருக்கும். பட்டி தொட்டியில் உட்கார்ந்து கொண்டு நினைத்த மாத்திரத்தில் அமெரிக்காவுக்கும் செல்லலாம், அன்டார்டிகாவுக்கும் செல்லலாம். அந்த அளவுக்கு மனதிற்கு சக்தி உண்டு. இந்த மனம் என்னும் சக்தியை நம் வசம் கொண்டு வந்துவிட்டால் உங்களிடம் இருக்கும் ஆற்றல் வெளி வரும்.

அந்த ஆற்றலை கொண்டு வியக்க தகு விந்தைகளை உங்கள் வாழ்க்கைக்கு பயன் படும் விதத்தில் நீங்கள் செய்யலாம்.

உங்கள் ஆற்றலை வெளி கொணரும் சக்தி மனதை அடக்கும் சக்தி தியானத்திற்கு மட்டுமே உண்டு. இந்த உண்மை இன்று நேற்றல்ல பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம்முடைய யோகிகளும், முனிவர்களும், மகான்களும் அறிந்து மனித குலத்திற்கு பல வியக்க தகுந்த நன்மைகளை செய்துள்ளனர்.

தியானம் ஒரு மனிதனின் மனதிற்குள் இருக்கும் தேவையற்ற குப்பைகள் அவைகள் கவலைகள், பயம், பொறாமை, நம்பிக்கையின்மை போன்ற தேவையற்ற சிந்தனைகளை களைந்து உங்களிடம் இருக்கும் ஆற்றலை வெளி கொணர்கிறது. உங்களிடம் இருக்கும் ஆற்றல் வெளி வரும்போது நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் சரி, வேலை பார்க்கும் இடத்திலும் சரி
மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக தெரிவீர்கள்.

எனவே தியானம் என்னும் அறிய கலை மூலம் உங்கள் ஆற்றலை உணராலாம் என்றால் அதில் மிகை இல்லை.
  
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள