அவ நம்பிக்கையினை களைந்து வெற்றி பெற செய்யும் தியானம்

ஒரு காரியத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில் அவ நம்பிக்கையை தூக்கி எறிய வேண்டும். அவ நம்பிக்கை என்றால் சிலர் ஒரு காரியத்தில் ஈடுபடும்போதே நம்மால் எப்படி இந்த விசயத்தில் வெற்றி அடைய முடியும் என்று இவர்கள் மேலேயே ஒரு நம்பிக்கை இருக்காது.

உதாரனத்திற்க்கு ஒரு நேர்முக தேர்வுக்கு ஒருவர் வேலைக்காக செல்கிறார். அந்த கம்பெனி வரவேற்ப்பரையில் காத்து கொண்டு இருக்கிறார். சுற்றி திரும்பி பார்க்கிறார் . அவரை போன்று ஆண்களும் பெண்களும் நேர்முக தேர்வுக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்த்ததும் இவ்வளவு பேர் வந்திருகிறார்கள் நாம் இந்த நேர்முக தேர்வில் ஜெயிப்போமா?
நமக்கு இந்த வேலை கிடைக்குமா? என்று ஒரு அவ நம்பிக்கை அவருக்கு உண்டாகிறது. அவ்வளவுதான் அவராகவே அந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்ளாமல் திரும்பி வந்து விடுகிறார் . ஒரு அவ நம்பிக்கையினால் ஒரு நல்லதொரு வேலை வாய்ப்பை இழக்கும் சூழ்நிலையை அவராகவே ஏற்படுத்தி கொண்டு விட்டார். இதற்க்கு ஒரு முக்கிய காரணம் அவருடைய மனதுதான். அவருடைய மனதுதான் அவ நம்பிக்கையை உண்டாக்கி வெற்றி வாய்ப்பை இழக்க செய்தது.

ஒரு உதாரனத்திற்க்கு இதை சொன்னேன். இது போன்று வாழ்க்கையில் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை அவ நம்பிக்கையில் இழந்தவர்கள் எத்தனையோ பேர்.

ஒருவருடைய அவ நம்பிக்கையை விரட்ட வேண்டும் என்றால் எந்த காரியத்தில் அவர் ஈடுபடுகிறாரோ அந்த காரியத்தில் அவர் வெற்றி பெற்றமாதிரி நினைக்க வேண்டும். ஒரு காரியத்தில் ஒருவர் வெற்றி அடைந்து விட்டதை போல் மனதில் நினைக்கும்போது அங்கு அவ நம்பிக்கை அல்லது இந்த காரியம் நடக்காது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

மனது என்பது சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையை போன்றது. தப்பு என்று நீங்கள் சொன்னால் அதுவும் தப்பு என்று சொல்லும். சரி என்று சொன்னால் அதுவும் சரி என்று சொல்லும்.

ஒரு பழைய தமிழ் திரைப்பட  பாடல் கூட உண்டு.

"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி, மனசை பார்த்துக்கோ நல்லபடி"

வாழ்வில் உங்களுக்கு நடந்த சந்தோசமான நிகழ்சிகளை அடிக்கடி நினைவு கூறுங்கள். மனைவி மக்கள் தாய் தந்தையருடன் உறவினர்களுடன் நண்பர்களுடன் நீங்கள் கூடியிருந்த சந்தோஷ நிகழ்சிகளை அடிக்கடி நினைவு கூறுங்கள். அப்படி செய்யும்போது உங்களையும் அறியாமல் ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாகம் நீங்கள் செய்யும் வேலையிலும் தொழிலும் பிரதி பலிக்கும். உங்கள் மனதை அது போன்று பழக்க படுத்துங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தில ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலையை உருவாக்குங்கள். சந்தோசமான விசயத்தை மட்டும் பேச கற்று கொள்ளுங்கள்.
அதுபோன்று பேசும்போது நீங்கள் மற்றவர்களால் கவரப்படுவீர்கள்.

தோல்வி சிந்தனை என்பது ஒருவரால் தடுக்க முடியாது. ஆனால் அதே தோல்வி சிந்தனையை வெற்றி சிந்தனை என்னும் சாட்டையை கொண்டு
விரட்டி விடலாம். ஒரு கடை வைத்திருக்கிறீர்கள். காலையில் இருந்து ஒரு வாடிக்கையாளர் கூட வர வில்லை. ஒரு விற்பனையும் நடக்க வில்லை.
சரி. கடையை இன்று மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்புவோம் என நினைக்கிறீர்கள். அந்த நேரம் பார்த்து நான்கு பேர் கடைக்கு வருகிறார்கள். வியாபாரம் செய்கிறார்கள். உங்களுக்கு சந்தோசம். காரணம் காலையில் இருந்து இரவு வரை ஆக வேண்டிய விற்பனையை அந்த நான்கு பேர்மட்டும் அதுவும் கடையை மூடலாம் என்று நினைக்க வேண்டிய நேரத்தில் செய்திருகிறார்கள் என்றால் என்ன சொல்வது. ஒரே பதில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். நம்பிக்கையை மட்டும் கை விடக்கூடாது. மனதை அது போன்று தயார் செய்து கொள்ள வேண்டும்.

சரி மனதை நம் கட்டுபாட்டுக்குள் வைத்துகொண்டோம் என்றால் வளமான சிந்தனைகளை கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஆனால் மனதை அவ்வளவு சுலபமாக நம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? கொண்டு வரலாம். தியானம் எனும் அற்புத கலை மூலமாக.

தியானம் என்னும் கலையை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது மனது அவர் வசப்படுகிறது. அவ நம்பிக்கை என்ற எண்ணமே உருவாகாது. காரணம் தியானம் மனதை சரியாக சிந்திக்க செய்யும்.

மனது சரியாக சிந்தனை செய்யும் போது அங்கு மகிழ்ச்சி ஒன்றுதான் நிலவும்.  தேவை இல்லாத அல்லது நடக்காத ஒரு விஷயத்தை நினைத்து கவலை பட செய்யாது. நம்மாலும் இந்த உலகத்தில் வெற்றி அடைய முடியும். நாம் வெற்றி அடைய வில்லை என்றால் பின் யார் வெற்றி பெற முடியும் என்ற சிந்தனை எப்போதும் இருக்கும். அதற்க்கு தகுந்தாற்போல் தியானம் எனும் அற்புத கலை மனதை தயார் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.      
 
            
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள