நினைத்ததை சாதிக்க செய்யும் தியானம்?

நினைத்ததை சாதிக்க செய்யும் ஆற்றல் தியானத்திற்கு உண்டா? உண்டு, ஆனால் அவைகள் நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும். அட்டூழியங்கள், அநியாயத்திற்கு தியானம் என்றும் துணை போகாது.

"நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே 
வளர்த்தவன் நான் ! நான் !"   

என்று உற்சாகமாக உங்களை பாட செய்யும் சக்தி தியானத்திற்கு உண்டு. 

சரி, அப்படியிருக்கும்போது ஒருசிலர் மட்டும் நம்மால் முடியாது என்று சோர்வடைந்து போவதின் காரணம் என்ன?

எல்லாம் அவர்கள் மனது செய்யும் வேலைதான். என்று மனது நம்பிக்கையை கைவிடுகிறதோ அன்றே ஒருவருக்கு மன சோர்வு உண்டாகிவிடுகிறது. சாதிக்கும் மனப்பான்மையும் கை விடப்படுகிறது. 

தன்னம்பிக்கை நழுவும்போதுதான் ஒரு மனிதன் தன்னால் எதையும் சாதிக்க முடியாது என்று எண்ணுகிறான். தன்னம்பிக்கையை கைவிட கூடாது என்பதற்கு நல்லதொரு திரை பட பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. 

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது

என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது

எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்

காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்

யாருக்கில்லை போராட்டம்

கண்ணில் என்ன நீரோட்டம்

ஓரு கனவு கண்டால்

அதை தினமும் என்றால்

ஓரு நாளில் நிஜமாகும்

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்

மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு

மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்

அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா?

துக்கம் என்ன என் தோழா?

ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்

அந்த வானம் வசமாகும்"

இந்த பாட்டை முடிந்தால் உங்கள் செல் போனில் ரிங் டோனாக வைத்துகொள்ளுங்கள். ஒவ்வொரு தடவையும் இந்த பாட்டு உங்கள் போனில் ஒலிக்கும்போதும் உங்கள் மனச்சோர்வு அகலும். 

சரி, தியானம் செய்வதின் மூலம் எப்படி நினைத்ததை சாதிக்க முடியும்?
தியானம் என்பதே மனம் சார்ந்த விசயம்தாம். ஒருவருடைய மனதுதான் அவருடைய இன்ப துன்பங்களுக்கு எல்லாம் காரணம். ஒரு டம்ளரில் உள்ள பாலில் ஒரு சிறு கருப்பு தூள் விழுந்தால் எப்படி அந்த வெண்மை    
கெட்டு போகின்றதோ அதை போன்றுதான் மனம் கெட்டுவிட்டால் உங்களால் எதையும் சாதிக்கமுடியாது. 

மனம் கெட்டு போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கை இழப்பது என்பது ஒரு முக்கியமான காரணமாகும். ஒரு செயலை பற்றி அல்லது அதன் விளைவுகளை பற்றி தவறாக சிந்திக்கும்போது அங்கு தன்னம்பிக்கை இழப்பதற்கு காரணம் உருவாகிறது. 

உதாரனத்திற்கு ஒரு வேலை விசயமாக ஒருவரை பார்க்க செல்கிறீர்கள். அவரை பார்த்து பேசுவதற்கு முன்பே இந்த வேலை நடக்காதோ என்று தன்னம்பிக்கையை இழந்தீர்கள் என்றால் அவை உங்களது பேச்சிலும் செயலிலும் பிரதிபலித்து ஆக வேண்டிய வேலையை ஆகாமல் செய்து விடும் உங்கள் மனது. 

உங்கள் மனது என்பது ஒரு மூளை இல்லாத வேலைக்காரனை போல அல்லது robot மனிதனை போல. 

எதை சொல்கிறீர்களோ அதை சரியாக செய்யும். தவறாக சொன்னீர்கள் என்றால் தவறாக செய்யும். சரியாக சொன்னீர்கள் என்றால் சரியாக செய்யும். ரஜினிகாந்த் நடித்த இந்திரன் படத்தில் நடித்த ரோபோட் "சிட்டி" செய்யும் வேலையை போல.

இந்த மூளை இல்லாத வேலைக்காரனை சரியாக வேலை செய்ய சொல்லும் ஆற்றல், சரியாக நினைக்க சொல்லும் ஆற்றல் தியானம் என்னும் அறிய சக்தியால் மட்டுமே உண்டு. 

ஒரு செயலை தொடங்கும் முன்பு நீங்கள் யாரிடமும் எதையும் இழக்கவில்லை. செயல் நடந்தால் "good", நடக்க வில்லையென்றால் "very good", அந்த "very good" இலும் ஏதாவது ஒரு நன்மை இருக்கும் என்று உங்களது மனதினை ஆறுதல் அடைய செய்யும் சக்தி தியானத்திற்கு உண்டு. 

தியானத்தினால் ஒருவருடைய மனது சரியாக சிந்திக்கும்போது அங்கு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கே வேலை இல்லை. நடக்கும், முயற்சி செய் என்ற பதில் மட்டும்தான் கிடைக்கும். 
தன்னம்பிக்கையின்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நீங்கள் நினைத்ததை அது நல்ல காரியமாக இருந்தால் சுலபமாக சாதிக்கலாம்.தியானத்தினை தொடந்து செய்யும்போது அதை அனுபவிக்கலாம். 
    
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள