Blood பிரஷர் நோயில் இருந்து விடுபட அல்லது வராமல் தடுக்க தியானம்

ரத்த கொதிப்பு நோய் என்று சொல்லப்படும் blood பிரஷர் நோய் இன்று சர்வ சாதரணமாக மக்களிடையே இருந்து வரும் ஒரு நோய்.

இந்த ரத்த கொதிப்பு நோய் வருவதற்கான முக்கியமான காரணங்கள் புகை பிடிக்கும் பழக்கம், அதிக உடல் எடை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, உணவு பொருட்களில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்ளுதல், அதிகமாக மது உட்கொள்ளுதல், மன அழுத்தம், வயது முதிர்வு, பரம்பரை காரணம், சிறுநீரக கோளாறு, டென்ஷன் போன்றவையாகும் என கூறப்படுகின்றன.

இந்த ரத்த கொதிப்பு நோயானது பெண்களை காட்டிலும் ஆண்களை அதிகம் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.

சில வகை உணவுகள் கூட ஒருவருக்கு ரத்த கொதிப்பு வர வாய்ப்பாகிறது.

ரத்தகொதிப்பு உண்டாவதற்கு காரணமான டென்ஷன் ஒருவருக்கு அதிகமாக ஆவதற்கு அவர் அன்றாடம் உணவில் சேர்த்துகொள்ளும் உப்பும் ஒரு வித காரணமாகிறது. இது குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டபோது உணவில் குறைவான அளவு உப்பு சேர்த்து கொள்பவர்களுக்கு ரத்த கொதிப்பு நோய் அணுகுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள் ரத்த கொதிப்பு நோய் வருவதற்கு காரணமாகிறது என்று சில ஆராய்சிகள் கூறுகின்றன.

அதுபோன்று பெண்கள்  குழந்தை பிறப்பதை தடுப்பதற்கு உபயோகபடுத்தபடும் மாத்திரைகள் மூலமாகவும் மற்றும் கர்ப்பம் தரிதிருக்கும்போதும் ரத்த கொதிப்பு நோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவருக்கு சரிவர தூக்கம் வராமல் இருந்து அவதிபட்டால் கூட அவர்களுக்கும் ரத்த கொதிப்பு நோய் வர கூடிய வாய்ப்பு இருக்கிறது.

சரி, இது போன்று ரத்த கொதிப்பு நோய்களில் இருந்து விடுபடுவது எப்படி அல்லது வராமல் இருக்க தப்பிப்பது எப்படி?

முதலில் புகை பிடிக்கும் பழக்கம், அதிக எடை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, உணவு பொருட்களில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்ளுதல், அதிகமாக மது உட்கொள்ளுதல், மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றில் இருந்து விடுபடவேண்டும்.

ரத்த கொதிப்பு சம்பந்தமாக மாத்திரை மருந்துகள் இருந்தாலும் கூட பக்க விளைவில்லாத தியானம் போன்ற மனம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளும்போது புகைபிடிக்கும் பழக்கம், அதிக எடை, மன அழுத்தம், டென்ஷன், தூக்கமின்மை  போன்றவைகளில் இருந்து விடுபடும்போது ரத்தகொதிப்பு நோய்க்கு தீர்வு காணலாம்.

மேலும் ரத்த கொதிப்பு என்பது இதயம் சம்பந்தப்பட்டது. தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளும்போது இதயதிர்க்குண்டான வேலை பளுகள் குறைக்கபடுகின்றன. அப்படி குறைக்கப்படும் பட்சத்தில் ரத்த கொதிப்பு நோய் குறைவதற்கு அல்லது வாராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன

தியானம் செய்யும் 300 மாணவர்களை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் தினம்தோறும் ஒரு சில நிமிடங்கள் செய்த தியான பயிற்சியினால்
அவர்களுக்கு ரத்த கொதிப்பு நோய் வருவதற்குண்டான மன ரீதியான டென்ஷன், மன சோர்வு போன்ற பிரச்சனைகள்  இல்லாமல் இருந்ததாக கூறப்படுகின்றது.  

எனவே தியான பயிற்சி மூலம் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ரத்தகொதிப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபட்டு அல்லது வராமல் தடுக்கலாமே.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள