பக்க விளைவுகள் இல்லாத (No side effects) பல வியாதிகளுக்கு தீர்வு காணும் தியானம்.

பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சி மனித இனத்திற்கு பல விதத்தில் நன்மையையும் அதே சமயத்தில் தீமையும் தருகிறது. உதாரணத்திற்க்கு இணையம் எனப்படும் internet ஐயே எடுத்து கொள்வோம்.

இணையத்தினால் எவ்வளவோ நல்ல விசயங்களை நம்முடைய விரல் நுனியில் நொடி பொழுதில் தெரிந்துகொள்கிறோம். சமுதாயத்தின் பல தரப்பு பிரிவினர்களுக்கும் அவர்கள் மாணவர்கள் ஆகட்டும், தொழில் புரிவோர் ஆகட்டும், யாராக இருந்தாலும் இணையம் பல நன்மைகளை கொடுக்கிறது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயத்தில் இணையத்தை தவறாக கையாண்டால் அதனால் கெட்டு போகிறவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதையும் மறுக்க முடியாது.

விவசாயத்தையே எடுத்து கொள்வோம். முன்பெல்லாம் பயிர்கள் பயிறுடுவதர்க்கு இயற்க்கை உரங்களை மட்டுமே பயன் படுத்தி வந்தனர். அதனால் மக்களிடையே வியாதிகளும் குறைந்து காணப்பட்டது. ஆனால் இப்போது chemical கலந்த உரங்களே பெரும்பாலும் இடப்படுகிறது. அதன் விளைவாக அந்த உணவுகளை உண்ணும் மனிதர்களிடையே பல வியாதிகள்.

இது போன்ற உடல் சார்ந்த வியாதிகளுக்கும் மனம் சார்ந்த வியாதிகளுக்கும்
பக்க விளைவில்லாத நல்லதொரு தீர்வு தியானம்தான்.

ஆராய்ச்சியாளர்கள் பல வியாதிகளுக்கு தியானம் ஒன்றே தீர்வாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நம் முன்னோர்கள் கற்றுவித்த தியானத்தை இன்று மேலை நாடுகளில் தீவிரமாக பயிற்சி செய்து பயன் அடைந்து வருகிறார்கள்.

இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு  தியானம் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது என்று "Medical college of Wisconsin in Milwaukee" நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கல்லூரியில் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தியானம் செய்யும் 48% மக்களிடம் heart attack, பக்க வாதம் எனப்படும் stroke போன்றவை குறைந்து அல்லது இல்லாமல் இருக்கின்றது என்று தெரிவிக்கின்றனர்.   

Times of India தன்னுடைய செய்தியில் தியானம் செய்து வரும் பலர் blood pressure,
stress என கூறப்படும் மன அழுத்தம்,  கோபம் போன்றவைகளில் இருந்து விடுபடுகின்றனர் என்று கூறுகிறது. அவர்களுடைய வாழ் நாளும் கணிசமான அளவிற்கு நீட்டிக்க படுகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Robert Schneider, M.D என்ற மருத்துவ நிபுணர், தியானம் என்பது ஒருவருடைய உடலையே தானாகவே வியாதிகளுக்கு குணமாகும் மருந்தாக ஆக்குகிறது அதாவது pharmacy யை போன்று என்று கூறுகிறார்.

இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தியானம் எப்படி நல்லதொரு தீர்வாக இருக்கிறது என்று "American Heart Association's Journal" லில் "Cardiovascular Quality and Outcomes" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

நோயாளிகளிடையே சில மாதங்கள் தியானம் செய்து விட்டு அதன் பின்பு நடத்தப்பட்ட சோதனையில் blood pressure மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக மருத்துவ மனையை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. கோபப்படும் தன்மையும் பலரிடையே குறைவதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

அது போன்று மது அருந்தும் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கங்களும் தியானம் செய்யும் மக்களிடையே குறைந்து அல்லது இல்லாமல் போவதாகவும், இறப்பு விகிதங்கள் குறைவாக இருப்பதாகவும்
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே தியானம் என்னும் நம்முடைய பாரம்பரிய கலை பக்க விளைவில்லாத நோய் தீர்க்கும் அறிய மருந்து என்று சொன்னால் அது மிகையாகாது.
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள