கவலைகளில் இருந்து விடுபட செய்யும் தியானம்


கவலைகள் இல்லாத மனிதர்கள் உண்டா? இருக்கிறார்கள். தான் யாரென்று தெரியாமல் தனக்கு தானே பேசி கொண்டு திரியும் பைத்தியக்காரர்கள் தான்

இந்த உலகத்தில் கவலை இல்லாத மனிதர்கள் ஆறாம் அறிவு என்ற ஒன்று வேலை செய்யாத பைத்தியக்காரர்கள்தான். அவர்கள்  எல்லாம் கவலை இல்லாமல் இருக்கும்போது ஆறறிவு பெற்று பகுத்து அறியும் தன்மை பெற்ற நல்ல புத்தி பெற்ற மனிதர்கள் கவலையினால் வாடி வதங்குவதை நினைத்தால் என்னவென்று சொல்வது?

ஒரு பழைய திரைப்பட பாடல் ஒன்று இங்கு எனக்கு ஞாபகம் வருகிறது.

"பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே"

கவலைகளுக்கு உருவம் உண்டா? நிறம் உண்டா? நிச்சயமாக இல்லை. ஆனால் அந்த கவலைகளுக்கு உருவத்தையும், நிறத்தையும் கொடுத்து தன்னை தானே வருத்தி கொள்வது இந்த மனித இனம் மட்டும்தான். அதற்க்கு மூல கர்த்தாவே ஒவ்வொருவருடைய மனதுதான்.

இங்கு ஒரு உண்மை கதையை கூற விரும்புகிறேன்.

ஒரு பெண்மணி. அவருக்கு ஒரு மகன். கணவன் கிடையாது. மகன் ஒரு நாள் தாயிடம் வந்து அம்மா எனக்கு ராணுவத்தில் வேலை கிடைத்துவிட்டது. அதனால் என்னை வாழ்த்துங்கள் அம்மா என்று கேட்கிறான்.

தாய்க்கு பையனுக்கு வேலை கிடைத்து விட்டது என்ற சந்தோசம் இல்லை. நீ அந்த வேலைக்கு போக வேண்டாம். என்னுடைய கணவனை இழந்த மாதிரி நான் உன்னையும் இழக்க தயாரில்லை. அந்த வேலையை வேண்டாம் என்று சொல்லிவிடு என்று கூறுகிறாள்.

பையனோ அம்மா உங்கள் சிந்தனை தவறு.
நான் வேலையில் சேர்ந்து சம்பாதித்தால்தான் நம் குடும்பம் மேன்மைக்கு வரும் அதனால் என்னை தடுக்காதீர்கள் என்று அந்த வேலையில் சேர்வதற்கு ஆயத்தமானான். தாயும் மனது இடம் கொடுக்காமல் பையனை வேலைக்கு அனுப்பி வைத்தால்.

பையன் வேலைக்கு சென்றது முதல் கவலையுடன் இருந்த அவளுக்கு மன வியாதியால் பாதிக்கப்பட்டு பித்து பிடித்தது போல் இருந்தாள் .

அவளுடைய உறவினர்கள் இவளுடைய உடல்நிலையினை கண்டு அவர்கள் தெருவில் உள்ள ஒரு நல்ல அனுபவசாலியான வயதான பெரியவரிடம் கூட்டி சென்று இவளுடைய நிலைமையை எடுத்து சொன்னார்கள்.

பெரியவர் இவளிடம் "உன்னுடைய பிரச்னை என்ன? "என்று கேட்கும்போது அந்த பெண்மணி "என் பையன் ராணுவத்தில் சேர்ந்தது முதல் எனக்கு கவலையாக இருக்கிறது" என்று கூறுகிறாள்.

அந்த பெரியவர் "அதற்கு ஏன் கவலை படவேண்டும்" என கேட்கிறார்?

அந்த பெண்மணி "இல்லை, ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தால் போர் வந்தால் என்னுடைய பையன் இறந்து விட்டால் அவனுடைய இழப்பை என்னால் எப்படி தாங்கி கொள்ள முடியும், அதுதான் எனக்கு கவலை" என்று கூறுகிறாள்.

உடனே பெரியவர் "ஓகோ, இது தான் உன் பிரச்சனையா" என்று கேட்டுவிட்டு "தேவை இல்லாத கற்பனைகளை வளர்த்து கொண்டு கவலை படாதே. ராணுவத்தில் வேலை செய்யும் அனைவருமே போரில் இறந்து விடபோவதில்லை. நடக்காத ஒன்றை நீ நினைத்து கவலை படுவதில் அர்த்தம் இல்லை" என்று ஆறுதல் கூறுகிறார்.

ஆறுதல் கூறிவிட்டு "நீ வீட்டுக்கு சென்றவுடன் ஒரு பேப்பரில் என்னுடைய பையன் ராணுவத்தில் வேலை செய்கிறான். அவன் இறந்துவிடுவான் என்று நான் கவலை பட்டு கொண்டு இருக்கிறேன் என்று எழுதி ஒரு drawer இல் வைத்து பூட்டி விடு,  நான் சொல்லும்போது மட்டும் அதை பிரித்து பார்" என்று அறிவுரை கூறி அந்த பெண்ணை அனுப்பி விடுகிறார்.

அந்த பெண்மணியும் அந்த பெரியவர் சொன்னது போல் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு பழையபடியும் மகனை நினைத்து கவலையுடன் இருக்கிறார். எப்போது என் மகன் ராணுவத்தை விட்டு வெளி வந்து என்னுடன் இருப்பான் என்று.

காலங்கள் உருண்டோடுகின்றன. சுமார் 15 வருட காலம் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அந்த பையன் திரும்பவும் தான் தாயுடன் நிரந்தரமாக சேருகிறான்.

இந்த சந்தோசத்தை அந்த பெரியவரிடம் சொல்வதற்காக
அந்த பெண்மணி போகிறாள். பெரியவரும் "ரொம்ப சந்தோசம். உனக்கு ஞாபகம் இருக்கிறதா, முன்பு உன் பையனை பற்றி கவலை பட்டுக்கொண்டு இங்கு வரும்போது நான் ஒரு பேப்பரில் உன்னை எழுத சொல்லி அதை drawer இல் பூட்டி வைக்க சொன்னேன். அந்த பேப்பர் ஐ எடுத்துவா" என்று கூறுகிறார்.  
   
அந்த பெண்மணியும் அந்த பேப்பர் ஐ எடுத்துகொண்டு அந்த பெரியவரிடம் திரும்ப வருகிறாள். "நீ எத்தனை  வருடங்களாக உன் பையனை நினைத்து அவன் இறந்துவிடுவான் என்று கவலை பட்டு கொண்டு இருந்தாய்" என கேட்கிறார். அதற்க்கு அவள் "15 வருடங்களாக, அவன் திரும்பி வரும் வரை அவனை நினைத்து கவலை படாத நாள் கிடையாது, நேரம் கிடையாது" என்று கூறுகிறாள்.   

"இப்போதுதான் நான் சந்தோசமாக இருக்கிறேன். என் கவலைகளும் பறந்து போய் விட்டது" என்று கூறுகிறாள்.

உடனே பெரியவர் "இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது" என கேட்கிறார். "எனக்கு ஒன்றும் தெரிய வில்லை" என்கிறாள்.

"இவ்வளவு வருடம் அதாவது 15 வருட காலம் என் மகன் இறந்துவிடுவான் என்று நடக்காத ஒன்றை நினைத்து கவலை பட்டு உன் மனதையும் உடலையும் கஷ்டபடுத்திகொண்டு இருந்திருக்கிறாய். நேரத்தையும், தூக்கத்தையும் தேவை இல்லாமல் இழந்திருக்கிறாய். அவைதான் உன்னுடைய கவலைகளுக்குண்டான பரிசு, திரும்ப இழந்த உன்னுடைய
தூக்கத்தையும், நேரத்தையும் திரும்ப பெற முடியுமா" என கேட்கிறார்.

அப்போதுதான் அந்த பெண்மணிக்கு எங்கேயோ எப்பவோ நடக்கும் ஒரு நிகழ்ச்சியை அதாவது ராணுவத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் போரில் இறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் 15 வருட காலம் கவலையுடன் வாழ்ந்து தூக்கத்தையும் நேரத்தையும் இழந்திருக்கிறோம் என்று உணர்ந்து வெட்கி தலை குனிகிறாள்.

இந்த பெண்மணி போன்று எத்தனையோ பேர் கவலைகளினால் துவண்டு போய் தங்களுடைய வாழ்க்கையையும் தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு சிறிய தோல்வி வந்துவிட்டால் போதும். உடனே கவலை.

மேலை நாடுகளில் படிக்கும் பிள்ளைகளை அவர்கள் படிக்கும் பாடங்களில் வேண்டும் என்றே தவறு செய்ய வைப்பார்களாம் ஆசிரியர்கள் . ஏன் என்றால் தவறு செய்தால் அது அவனுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும் என்று.

மனிதர்களுடைய மனம்தான் கவலைகளுக்கு காரணம். நான் மேலே சொன்னவாறு கவலைகளுக்கு உருவம் கிடையாது, நிறம் கிடையாது. ஒருவர் ஒரு செயலை பற்றி தவறாக சிந்திக்கும்போதுதான் மனம் அதற்கு ஒரு நிறம், உருவம் கொடுத்து கவலை அடைய செய்கிறது. மனதானது தவறாக சிந்திக்க காரணம் பயம், தன்னம்பிக்கை இழத்தல் போன்றவற்றால்தான்.

மனது சரியாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அல்லது ஒரு செயலை சரியாக பகுத்து அறிய ஆரம்பித்து விட்டால் அங்கு கவலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

ஆனால் மனதை கட்டுபடுத்துவது என்பது ஒரு கஷ்டமான காரியமாகும். ஆனால் முடியாத காரியம் இல்லை.

தியானம் என்ற அறிய கலை மூலம் மனதை சரியாக சிந்தனை செய்ய சொல்ல முடியும். சரியாக பகுத்து அறிய சொல்ல முடியும். இந்த உண்மையை அறிந்துதான் முனிவர்களும் மகான்களும் தியானத்தின் மூலம் தங்கள் மனதை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து அதாவது விந்தைகளையும் நன்மைகளையும் மனித இனத்திற்கு செய்து வந்திருக்கின்றனர்.

 எனவே தியானம் என்னும் அறிய கலை மூலம் கவலைகளை ஒழித்து சந்தோசமாக நல்ல ஆரோக்கியத்துடனும், வெற்றிகரமாக வாழலாமே?        
           
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள