தூக்கம் நன்றாக வர தியானம்

தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது.
படுத்தவுடன் சிலர் அடுத்த சில நிமிடங்களிலேயே தூங்கி விடுவர். ஒரு சிலருக்கு புரண்டு புரண்டு படுத்தாலும் கூட தூக்கம் வருவது சிரமம். வெகு நேரம் விழித்திருக்க வேண்டிய நிலைமை.

கடினமான உழைப்பு உழைத்துவிட்டு வந்தாலும் சிலருக்கு சாமான்யமாக தூக்கம் வராது.

தூக்கம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. மனது அமைதியாக இல்லை என்றால் எத்தனை நேரம் ஆனாலும் தூக்கம் என்பது வராது.

பொதுவாக கடுமையான உழைப்பிற்கு பின்பு தூக்கம் வரவேண்டும். ஆனால் மனது அமைதியின்றி  இருந்தால் நிச்சயமாக தூக்கம் வராது.

மனது அமைதி இல்லாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அவற்றில் சில நம்பிக்கை இழத்தல், பயம், பொறாமை, தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம் போன்றவை.

மனது இதுபோன்று காரணங்களால் பாதிக்கப்படும்போது அவைகளை பற்றியே சிந்தனையே இருக்கும். கண்ணை மூடினாலும் நம்பிக்கை இழத்தல், பயம், பொறாமை, தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம் போன்றவை திரைப்படம் மாதிரி ஓடி கொண்டு இருக்கும்.

சிலருக்கு எதையும் உடனேயே மறந்து விடும் சுபாவம் உண்டு. அதனால் அவர்கள் எப்பேர்பட்ட நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் எதை பார்த்தும் கேட்டும் கவலை படமாட்டார்கள். எதையும் டேக் இட் ஈசி  என்ற policy இல் போய் விடுவர். இடியே பக்கத்தில் விழுந்தால் கூட கவலை பட மாட்டார்கள்.
அவர்களுக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்சனையே இருக்காது.

ஆனால் எது நடந்தாலும் அதை மனதிற்கு எடுத்து சென்று கவலை படுபவர்கள், அதையே நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தூக்கம் ஒரு பிரச்சனையாகத்தான்  இருக்கும். இதுபோன்றவர்கள் தூக்க பிரச்சனையிலிருந்து விடுபட என்ன வழி?

ஒரே வழி அவர்கள் மனதை சரி செய்வதுதான்? மனதை எப்படி சரி செய்யமுடியும்?

தியானம் என்னும் உயரிய கலைமூலம் மனதை சரி செய்யலாம். ஒருவர் தியானம் தொடர்ந்து செய்யும்போது அவருடைய மனது சாமான்யமாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது. எந்த ஒரு செயலையும் சிந்தனையையும்
பகுத்து அறிய மனதினை தியானம் தயார் செய்கிறது. மனது பகுத்து அறியும்போது ஏன் கவலை படவேண்டும், ஏன் பயப்பட வேண்டும், ஏன் பொறாமை பட வேண்டும், ஏன் தோல்வியை நினைத்து வருத்தப்பட வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்து விடும். கவலை பட்டு ஒன்றும் ஆக போவதில்லை,
பொறாமை பட்டு ஒன்றும் ஆக  போவதில்லை, தோல்வியை நினைத்து ஒன்றும் ஆக போவதில்லை என்று சிந்திக்க ஆரம்பித்து விடும். அப்படி ஒரு நிலை வரும்போது மனது இலகுவாகிறது. அங்கு எந்த அவ நம்பிக்கை, பயம், பொறாமை, தோல்வி போன்ற சிந்தனைகளுக்கு இடம் இல்லை. அதுபோன்ற மன நிலையினை தியானம் தயார் செய்கிறது.

எனவே இதுபோன்ற மனநிலை ஏற்படும்போது ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்னை இல்லை. மனதை சரி செய்யவில்லை என்றால் தூக்க மாத்திரை சாப்பிட்டால் கூட தூக்கம் வராது.

மேலும் தியானம் செய்வதினால் உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. ஒரு சில நிமிடங்கள் செய்யும் தியான பயிற்சியினால் கிடைக்கும் ஓய்வானது 6 மணி நேரம் தூங்கினால் என்ன ஓய்வு கிடைக்குமோ அந்த ஓய்வு கிடைக்கிறது என்று ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே தூக்கம் என்பதே பிரச்சனையாக உள்ளவர்கள் தியானம் என்னும் அறிய கலையின் மூலம் விமோசனம் பெறலாமே?
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள