பயத்திலிருந்து விடுபட செய்யும் தியானம்

பயம். இன்று பலரை ஆட்டி படைத்தது கொண்டு இருக்கிறது. அதுவும் இள வயதினர்கள் இந்த பயத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை எனக்கு வரும் email லில் இருந்து தெரிகிறது.

உண்மையிலேயே பயம் என்பது எங்கிருந்து உற்பத்தி ஆகிறது. அதற்க்கான காரணங்கள் என்ன?

பயம் என்பது ஒருவருடைய சிந்தனையில் இருந்து தான் பார்க்கும், கேட்கும், படிக்கும் நிகழ்சிகளில் இருந்து உருவாகிறது. இந்த பயம் பற்றிய சிந்தனை அவருடைய ஆழ்மனதில் பதிந்து அடிக்கடி அவரை பயமுறுத்தி கொண்டு இருக்கும்.

உதாரனத்திற்க்கு ஒரு ஊருக்கு பயணம் செய்ய ரயிலில் முதல் வகுப்பில், படுக்கை வசதியுடன் கூடிய reservation compartmentல் ஒருவர் பயணமாக ரயில்வே ஸ்டேஷன் க்கு வருகிறார். அங்கிருக்கும் செய்தி தாளை வாங்குகிறார். ரயில் platform வருவதற்கு இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் என அறிவிப்பு செய்கிறார்கள். சரி அது வரையில் செய்தித்தாளை படிக்கலாம் என்று முதல் பக்கத்தை திருப்புகிறார். பெரிய எழுத்தில் டெல்லி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து. சாவு 50 என்ற செய்தியை படிக்கிறார். அவ்வளவு தான் இவரையும் பயம் தொத்தி கொள்கிறது. அய்யயோ நாம் பயணம் செய்யும் ரயிலும் தீபிடித்து கொள்ளுமோ என்ற பயத்தில் மேற்கொண்டு செய்தியே படிக்காமல் பேப்பர் ஐ மூடி வைத்து விடுகிறார். இதற்குள் அவர் செல்ல வேண்டிய ரயிலும் வந்து விடுகிறது. ஏறி அமர்கிறார். ரயிலும் கிளம்பி விட்டது. சிறிது நேரத்தில்  சக பயணிகள் அவர் அவர் படுக்கையில் படுத்துதூங்க ஆரம்பித்து விடுகின்றனர். இவரோ தூங்காமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். இன்று நாம் தூங்க கூடாது. திடிரென்று தீபிடித்தால் குதித்து தப்பி விட வேண்டும் என
கொட்ட கொட்ட விழித்து கொண்டு விடிய விடிய பயணம் செய்கிறார். அவர் நினைத்தது போல் எந்த அசம்பாவிதமும் நடக்க வில்லை. காலையில் ரயிலை விட்டு இறங்கி தான் போக வேண்டிய இடத்துக்கு பத்திரமாக எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சென்று விடுகிறார்.

ஆக மொத்தம் எங்கோ எப்போதோ நடக்கின்ற ஒரு விபத்தினை நினைத்து கொண்டு இரவு முழுவதும்  தூங்காமல் ஒரு பயத்துடன் பயணம் செய்த இவரை என்ன வென்று சொல்வது.
தூங்கும் வசதிக்கான காசையும் இழந்து தூங்காமல் பயணம் செய்யும் நபர்கள் இதுபோன்று நிறைய இருக்கின்றனர்.  இந்த பயத்தை உருவாகியது யார்? சந்தேகம் இல்லாமல் இவருடைய மனதுதான். பயம் மட்டும் அல்லது கவலையும் சேர்த்து உருவாக்கியது இவருடைய மனதுதான்.
   
இதுகுறித்து ஒரு பழைய பாடல் ஒன்று என் நினைவுக்கு வருகிறது.
"வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுண்ணு
விளையாடப் போகும் போது சொல்லி வச்சாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வச்சாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே”

பயம் என்பது உருவாகுவதற்கு பல காரணங்கள் உண்டு. அவை அனைத்தும் மனம் சார்ந்த காரணங்கள். நம்பிக்கையின்மை அல்லது தன்னம்பிக்கையை இழத்தல், எங்கோ எப்போதோ நடக்கும் ஒரு செயலை நினைத்து நமக்கும் அது போன்று நடந்து விடுமோ என்று பயப்படுவது,.
மரண நிகழ்சிகளை பார்த்து பயப்படுவது, உயரமான இடத்தில் இருந்து கீழே நோக்கி அதை பார்த்து பயப்படுவது, ஆகாய விமானத்தில் பயணம் செய்ய பயப்படுவது, இது போன்று இன்னும் எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.

நடக்க வேண்டிய எந்த ஒரு விசயத்தையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நடக்காத விஷயத்தை யாராலும் நடக்க வைக்க முடியாது. அது இயற்கையின் ரகசியம். அந்த ரகசியம் தெரிந்தால் மனிதர்களை கையில் பிடிக்க முடியாது. இயற்கையின் ரகசியத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போதுதான் பயம் ஒருவரை தொத்தி கொள்கிறது.

பயத்திற்கான மூல காரணமே உங்கள் சிந்தனைதான். இந்த சிந்தனை உருவாகும் இடம் உங்கள் மனது. உங்கள் மனதை கட்டுபடுத்தினால் உங்கள் மனது எது உண்மை எது போலி என்று சிந்திக்க தொடங்கிவிட்டால் பயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

உங்கள் மனது உண்மை எது பொய் எது என்று  தியானத்தின் மூலம்தான் சிந்தனை செய்ய முடியும். ஒருவர் தொடர்ந்து தியானம் செய்யும்போது அவரையும் அறியாமல் தன்னம்பிக்கை வளர்கிறது. தன்னம்பிக்கை இல்லாதபோதுதான் அது கவலையாக உருவெடுக்கிறது. கவலைதான் பின்பு பயமாக மாறுகிறது. தியானத்தின் மூலம் மூளையின் அலைகள் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. மூளை அலைகள் ஒழுங்காக வேலை செய்யும்போது ஒருவர் தன்னம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னம்பிக்கை இழக்காத போது அங்கு பயம் என்ற பேச்சு இல்லை. தியானம் இந்த இரண்டையும் உறுதி செய்கிறது.         
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள