ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க தியானம் உதவுமா?

ஹார்ட் அட்டாக் என்பது மிகவும் கொடுமையான ஒரு நிகழ்வாகும். முன்பெல்லாம் ஹார்ட் அட்டாக் என்பது 70 வயது அல்லது  அதற்க்கு மேல் வயது உள்ளவர்களுக்கு வரும் என்று கேள்வி பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம்.

ஆனால் இப்போது செய்தி தாள்களில் வரும் செய்தி, அல்லது காதில் விழுந்த செய்திகளில் மிகவும் குறைந்த வயதிலேயே ஹார்ட் அட்டாக்  என்னும் கொடிய நிகழ்வு உயிரை பறிக்கும் செய்திகளை கேள்வி படும்போது மிகவும் மன கலக்கமடைகிறது.

சமீபத்தில் செய்தி தாளில் வந்த ஒரு செய்தி 29 வயதே ஆன ஒரு இளைஞர் திடிரென்று ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக செய்தி படிக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அப்படி பார்க்கும்போது 40 வயது 50 வயது களில் ஹார்ட் அட்டக்கினால் மரணம் சம்பவிப்பது இப்போது மிகவும் சர்வ சாதரணமாகி விட்டது.

என்னுடைய நண்பர் ஒருவர் 55 வயது புகை வண்டி கிளம்ப போகிறதோ என்று அவசர அவசரமாக ரயில் நிலையத்தில் ஓடிவந்திருக்கிறார். ஓடி வந்த அதிர்ச்சியில் அங்கேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார்.

இது போன்று இத்தகைய சிறு வயது மரணங்கள் ஹார்ட் அட்டாக்கினால் ஏற்படுவது இப்போது சர்வ சாதரணமாகி விட்டது.

இது போன்று இளம் வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

இப்போதைய வாழ்க்கை முறைதான் காரணம். காலை எழுந்தது முதல் மாலைவரை வீட்டிலிருந்து அலுவலகம், தொழில் செய்யும் இடங்களுக்கு சென்று வரும் வரை ரோட்டில் நிகழும் நிகழ்வுகள், டிராபிக் ஜாம், வேலை செய்யும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் டென்ஷன் நிறைந்த தொழில் வேலை, வேலை தொழில் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்தவுடன் குடும்ப உறுப்பினர்கள் தேவையை பூர்த்தி செய்ய உண்டாகும் டென்ஷன், மனைவி குழந்தைகள் தன்னை புரிந்து கொள்ளாமல் அல்லது தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக உண்டாகும் டென்ஷன், பண பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் உண்டாகும் டென்ஷன் இது போன்று இன்னும் பல பிரச்சனைகள்.

இந்த பிரச்சனைகள் எல்லாம்  மனதில் குடி கொள்ளும்போது இதயம் வழக்கத்திற்கு மாறாக வேலை செய்கிறது. அதிகம் வேலை செய்யும் சூழ்நிலை உருவாக்க படுகிறது. இதயம் என்பது ஒரு machine ஐ போன்றது. அளவுக்கு அதிகமாக வேலை செய்யும்போது  ஒரு machine  எப்படி பளுதடையுமோ அது போன்று அளவுக்கு அதிகமாக இதயம் துடிக்கும்போது அதனுடைய செயல் திறன் சீக்கிரமே பாதிக்கப்பட்டு அல்லது உடனடியாக பாதிக்கப்பட்டு heart attack
உண்டாக வாய்ப்பாகிறது.

சரி இதுபோன்று ஹார்ட் அட்டாக் வியாதிகளில் இருந்து தப்பிக்க தியானம் உதவுமா?

பொதுவாக தியானம் செய்யும்போது இதயத்தின் துடிக்கும் அளவு மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இதயம் துடிக்கிறதா அல்லது இல்லையா என்று உணரும் அளவுக்கு தியானம் செய்யும்போது இருக்கும். என்னுடைய 20 வருட தியான அனுபவத்திலேயே நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நாளைக்கு இதயத்தின் வேலையை நாம் தியானத்தின் மூலம் குறைக்கும் போது தொடர்ந்து செய்யும்போது இதயத்தின் வேலை பளு குறைந்து அதிக நாட்களுக்கு உழைப்பதற்கு ஏதுவாகிறது. இதயத்தின் வேலைப்பளு குறையும்போது ஹார்ட் அட்டாக் என்ற பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு ஆராய்ச்சி செய்யப்பட்டதில் இதய துடிப்பு தியானம் செய்யும்போது குறைகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 15 நபர்களை வைத்து சோதனை செய்யும்போது தியானம் செய்தவர்களின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 5 தடவைகள் குறைகின்றது என்று ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

இது போன்று இதயத்தின் வேலை பளு அல்லது இதய துடிப்பு குறையும் பட்சத்தில் தியானம் செய்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் என்னும் வியாதி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறலாம்.        
           
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள