போதை பழக்கங்களில் இருந்து விடுபட தியானம் உதவுமா?

இந்தியா  அளவிலும் சரி உலக அளவிலும் சரி சில இளைஞர்களிடம் காணப்படும் போதை பழக்கங்கள். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆண்கள் மட்டும் அன்றி பெண்களும் இது போன்று போதை பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு இருப்பது மிகவும் வருந்ததக்ககூடிய விஷயம் ஆகும்.

போதை பழக்கங்கள் என்பது மது, சிகரெட், போதை மருந்து பவுடர் போன்ற அனைத்தும் சேர்ந்ததுதான்.

இது போன்று போதை பழக்கங்களுக்கு அடிமையாகும் ஆண்களும் பெண்களும் தங்களது உடலையும் கெடுத்துக்கொண்டு தங்களை சார்ந்து இருக்கும் தாய், தந்தையர்,  மனைவி, கணவன், குழந்தைகளுடைய மனதினையும் பாதிக்க செய்கின்றனர்

சில நேரங்களில் இந்த போதை பழக்கங்களினால் கொலை செய்யும் நிகழ்சிகளும் நடக்கின்றன.

குடி பழக்கத்தினால் கணவன் மனைவியை கொலை செய்வதையும், மனைவி கணவனை  கொலை செய்வதையும் செய்திதாள்களில் இடம் பெரும் அன்றாட நிகழ்ச்சியாக இருக்கிறது.

புகை பிடிக்கும் பழக்கத்தினால் புற்று நோயினால் உயிரை இழக்கும் செய்திகள்
அன்றாடம் பெரும்பாலும் அனைவரும் கேள்விப்படும்  நிகழ்ச்சியாகும்.

போதை பழக்கத்துக்கு அடிமையாகி ஒரு இளம்  பெண்  நடு ரோட்டில் தன்னுடைய மானத்தை இழந்து போதை பவுடர் கேட்டு சில இளைஞரிடம் ஒரு சினிமா தியோட்டர்
முன்பு கெஞ்சி அழுவதை செய்தி தாள்களில் படித்தேன். எந்த அளவுக்கு போதை பழக்கம் ஒருவரை அடிமை ஆக்கி இருக்கிறது என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கத்தியை கட்டி பெற்றவர்களை போதை பழக்கத்திற்காக
பணம் கேட்கும் இளைஞர்களையும் கேள்வி பட்டு இருக்கிறேன்.

சரி இதுபோன்று போதை பழக்கங்களில் அடிமையாக காரணம் என்ன?
ஒரு மாயை தான். இல்லாத ஒன்றை போதை பழக்கங்கள் தருவதாக அதை உபயோகிப்பவர் நினைப்பதால்தான். மது குடிப்பவர் என்ன நினைக்கிறார்?
மது குடிப்பதால் நான் கவலையை மறக்கிறேன், என் உடம்பில் உள்ள வலிகள் எல்லாம் போய் விடுகின்றன என்று பொய்யாக சிந்திப்பதால்தான்.
புகை பிடிப்பவர் தான் புகை பிடிக்கும்போது தனக்கு ஒரு ஓய்வு கிடைக்கின்றது, சிந்தனை பிறக்கின்றது என்ற மாயைதான்.
போதை பவுடர் உபயோகிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள். அவர்கள் ஒரு புது உலகத்தில் சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற தவறான சிந்தனைதான்.

எனவே இவை அனைத்தும் மனம் சார்ந்த தவறான சிந்தனையாகும். அப்படியென்றால் மனது சரியாக சிந்திக்க தொடங்கிவிட்டால் இந்த போதை பழக்கங்களில் இருந்து விடுபட முடியுமா? நிச்சயமாக முடியும். நிறைய ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

மனது சரியாக சிந்திக்க தியானம் மிகவும் உதவுகிறது. சில வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் போதை மாத்திரைகள் உபயோகபடுத்தும் சிலருக்கு தியானம் செய்யும் பழக்கத்தை கற்று கொடுத்தனர். காலையும் மாலையும் தியான பயிற்சி கற்று கொடுக்கப்பட்டது. சில மாத பயிற்சிக்கு பின்பு அவர்களில் 70 சதவிதம் பேர் போதை பழக்கத்தை நிறுத்தி விட்டார்கள் என ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று 18 நபர்களுக்கு தியான பயிற்சி அளிக்கும்போது அவர்கள் சில மாத பயிற்சிக்கு பின்பு 16 பேர் குடிபழக்கத்தை நிறுத்தி விட்டனர்.

அதுபோன்று சிகரெட் பிடிக்கும் சிலர் சில மாத தியான பயிற்சிக்கு பின்பு cigrettee
பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்டனர் என்று ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

தியான பயிற்சியினை ஒருவர் தொடர்ந்து செய்யும் போது அவருடைய மன சோர்வு அதாவது stress நீக்கப்படுகிறது. மன சோர்வு நீங்கும் போது போதை பழக்கத்தை உட்கொள்ளும் ஆவல் நீக்கபடுகிறது.

தியான பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது உடல் களைப்பு நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பதால் போதை பழக்கத்தை உட்கொள்ளும் பழக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கபடுகிறது.

எனவே தியானம் என்னும் அறிய பயிற்சியினை தொடர்ந்து செய்யும்போது போதை என்னும் மாயையில் இருந்து விடுபடலாம்.  
  
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள