தூக்கம் என்பது மனிதர்களுக்கு கிடைத்த ஒரு வரப்ரசாதம். இயற்கையால் மனித உடலுக்கு வகுக்க பட்ட நியதி. ஓய்வு ஒழிச்சல் இன்றி உடலில் உள்ள கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கும் உடல் உறுப்புகள் சோர்வடைந்து பழுதடைந்து விடக்கூடாது என்பதற்காக தூக்கம் அல்லது ஓய்வு என்னும் ஒரு அற்புதமான அருமையான வழியை இயற்கையானது மனித உடலுக்கு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் பார்த்தால் எல்லோரும் இந்த தூக்கம் என்ற அருமையான இயற்க்கை கொடுத்துள்ள வரப்ரசாததை அனுபவிக்கின்றனரா என்று கேட்டால் இல்லை என்ற பதிலை சொல்ல வேண்டி வரும்.
ஏனென்றால் என்னுடைய மின்னஞ்சலில் தியானம் கற்று கொள்ள விரும்பும் பெரும்பான்மையினர் சொல்லும் குறையே எனக்கு தூக்கம் இல்லை, நான் தூங்கி பல வருடங்கள் ஆகின்றன என்று கூறுகின்றனர்.
இன்னும் சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டும் எனக்கு தூக்கம் என்பதே இல்லை என்றும் கூறுகின்றனர்.
சரி ஏன் தூக்கம் என்பது சிலருக்கு முழுமையாக இல்லாமல் போய் விடுகிறது அல்லது சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது?
பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் படத்தின் பாடல்தான் அதற்க்கு பதில்.
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள ஆனால் நடைமுறையில் பார்த்தால் எல்லோரும் இந்த தூக்கம் என்ற அருமையான இயற்க்கை கொடுத்துள்ள வரப்ரசாததை அனுபவிக்கின்றனரா என்று கேட்டால் இல்லை என்ற பதிலை சொல்ல வேண்டி வரும்.
ஏனென்றால் என்னுடைய மின்னஞ்சலில் தியானம் கற்று கொள்ள விரும்பும் பெரும்பான்மையினர் சொல்லும் குறையே எனக்கு தூக்கம் இல்லை, நான் தூங்கி பல வருடங்கள் ஆகின்றன என்று கூறுகின்றனர்.
இன்னும் சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டும் எனக்கு தூக்கம் என்பதே இல்லை என்றும் கூறுகின்றனர்.
சரி ஏன் தூக்கம் என்பது சிலருக்கு முழுமையாக இல்லாமல் போய் விடுகிறது அல்லது சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது?
பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் படத்தின் பாடல்தான் அதற்க்கு பதில்.
"மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி"
ஆம் இந்த மனது படுத்தும் பாடுதான் ஒருவருக்கு தூக்கம் தொலைந்து போவதற்கு காரணம்.
இந்த மனமானது அதிக சந்தோசமாக இருக்கும்போதும் தூக்கத்தை பலி வாங்கி விடும். அந்த சந்தோசமான நினைவுகளே தூக்கத்தை வரவழைக்க விடாது.
அதே போன்று தேவை இல்லாத சிந்தனைகளினால் மனம் பாதிக்கப்படும் போதும் தூக்கம் தொலைந்து விடும். மனது அறிவு பூர்வமாக சிந்திக்க தயங்கும் போதும் எது நல்லது எது கேட்டது எது உண்மை எது பொய் என்று சிந்திக்க தவறும் போதும் மனது பாதிக்கப்பட்டு தூக்கம் தொலைக்க படுகிறது.
ஆனால் ஒரு சிலர் பார்த்தீர்கள் என்றால் அது கார்கில் போர் முனையாக இருந்தால்கூட கிடைக்கும் இடத்தில படுத்து சுகமாக தூங்கி கொண்டு இருப்பார்கள்.
அன்றாடம் பிழைப்பு நடத்தும் எத்தனையோ பேர் ரோடு ஓரங்களிலும், மரத்தடியிலும் கையையே தலைஅனையாக கொண்டு பக்கத்தில் இடியே விழுந்தாலும் சுகமாக தூங்கி கொண்டு இருப்பர்.
காரணம் நாளை என்பதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நேற்று நடந்ததை பற்றி கவலை பட அவர்களுக்கு எண்ணம் இல்லை. இன்று பசி ஆற்ற என்ன வேலை என்ற சிந்தனை மட்டும்தான் இருக்கும். வேலை கிடைத்தால் உண்டு இல்லையா ஒரு டம்ளர் பச்சை தண்ணியை குடித்து விட்டு நிம்மதியாக தூங்கி கொண்டு இருப்பார்கள்.
நேற்றை பற்றியும், நாளையை பற்றியும் நினைத்து கொண்டு இருப்பவர்கள் தான் எப்போது பார்த்தாலும் எதையாவது சிந்தனை செய்து கொண்டு மனதை கெடுத்து கொண்டு, யாரை தட்டினால் எப்படி சொத்து சேர்க்கலாம் என்று மன குதிரையை இரவு பகல் என்று பாராமல் ஓட விட்டு குதிரையும் சோர்ந்து மனமும் சோர்ந்து தேவை இல்லாத வியாதிகளை வாங்கி ஆஸ்பத்திரியில் லட்சம் லட்சமாக செலவு செய்து என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாமலே மேல் உலகத்திற்கு "போர்டிங் பாஸ்" வாங்கி விடுவர்.
அவன் இந்த உலகத்தில் உள்ள அத்தனை சொத்துக்களுக்கும் அதிபதியாக இருந்து லட்சம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் செத்து விட்டால் சொத்து சேர்த்து வைத்த பிள்ளையாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் அவன் பெயர் "dead body" அப்பா என்ற பட்டமும் கணவன் என்ற பட்டமும் காற்றில் பறந்து விடும். அவன் சேர்த்து வாய்த்த லட்சம் கோடி சொத்தும் ஒரு inch கூட அவனுடைய உயிரை காப்பாற்ற முடியாது.
அடுத்தவர் வயிற்று எரிச்சலில் யாரும் சுகமாக வாழமுடியாது. பணம் எப்படி வந்ததோ அதே போல் திரும்பி சென்று விடும். ஒரே இரவில் கோடீஸ்வரன் பிச்சைக்காரனாகி விடுவான். பங்கு சந்தையில் அவனுடைய கம்பெனி ஷேர் கீழே விழுந்தது என்றால் இவன் கதி அதோ கதிதான்.இவன் கதை நேற்று வரை கோடீஸ்வரன் இன்று பிச்சைகாரன்.
எவ்வளவு பெரிய பதவியில் இருந்து ஆட்டம் போட்டாலும் இயற்கையிடம் இருந்து தப்பிக்க முடியாது. கொஞ்ச காலம் வேண்டுமானால் நியாயம் தோற்று போகும். ஆனால் ஜெயிக்க வேண்டிய நேரத்தில் நியாயம் கரெக்டாக ஜெயித்து விடும்.
"நியாயம் ஜெயிக்க வேண்டிய நேரத்தில் கரெக்டாக ஜெயிக்கும். அதே போன்று நியாயம் ஜெயிப்பதை ஆண்டவன் நினைத்தாலும் தடுக்க முடியாது."
எனவே இருக்கும்காலம் வரை யாரையும் துன்புறுத்தாதீர்கள். உதவி செய்ய முடியவில்லை என்றாலும் உபத்திரவம் கொடுக்காதீர்கள். உபத்திரவம் கொடுத்து உங்கள் மனதை மாசு படுத்தி கொள்ளாதீர்கள்.
பெற்றவர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள். நீங்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காதீர்கள். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது கஷ்டமாக இருக்கிறது என்று உங்களை அவர்கள் அநாதை ஆசிரமத்தில் சேர்க்கவில்லை. விஷம் வைத்து உங்களை கொல்ல வில்லை.
கஷ்டபட்டாலும் கடன் வாங்கியாவது உங்களை படிக்க வைத்து, உணவு கொடுத்து இன்று உங்களை ஒரு நல்ல நிலைமைக்கு வைத்திருக்கின்றனர்.
வானத்தில் இருந்து முழு மனிதனாக இறக்கி விட பட வில்லை. இரவு பகல் என பல இரவுகளையும் பகலையும் தொலைத்ததுதான் உங்களை மனிதனாக்கி உள்ளார்கள்.
பெற்றவர்கள் மனதை குளிர வையுங்கள். உங்கள் மனது குளிரும். நிம்மதியாக தூங்குவீர்கள்.
இதுபோன்று எத்தனையோ நிகழ்வுகளை என்னால் கூறமுடியும். பதிவின் நீளம் கருதி சுருக்கி கொள்ளுகிறேன்.
சரி தெரிந்தோ தெரியாமலோ துன்பங்கள், பாவங்கள் செய்து விட்டீர்கள். இனிமேலாவது அதை தொடராதீர்கள்.
இதுவரை நீங்கள் செய்த பாவமும் துன்பமும் தான் உங்கள் மனதை வாட்டி
மன வியாதியை உண்டாக்கி தூக்கம் என்ற அருமையான இயற்க்கை அளித்துள்ள வரப்ரசாததை காவு வாங்கி விட்டது.
கவலை பட வேண்டாம், அழுக்கான மனதை கழுவி காய வைத்து சுத்த படுத்தினால் இழந்த தூக்கத்தை மீட்க முடியும். ஒருநாள் மட்டும் கழுவ கூடாது. தினமும் கழுவ வேண்டும்.
ஏன் என்றால் தினம் தோறும் பல வித சூழ்நிலைகளில் உங்கள் மனதை தெரிந்தும் தெரியாமலும் அழுக்காக்கி கொன்று இருப்பீர்கள்.
அன்றாடும் உணவு அருந்தும் தட்டை சுத்தபடுத்தி உணவு அருந்துவதில் கவனம் செலுத்தும் நாம் அழுக்கான மனதை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துவதில்லை.
அழுக்கான மனதை சுத்தம் செய்யும் ஒரே vaccum cleaner தியானம் மட்டும்தான்.
இதை பல ஆராய்சிகள் நிரூபணம் செய்துள்ளன.
எனவே தியானம் என்னும் அருமருந்தை தொடர்ந்து முறையாக செய்து வந்தால் தூக்கம் இன்மை என்ற அரக்கனை உங்களிடம் இருந்து விரட்டி விடலாம்.