தியானமும் கவலைகளில் இருந்து விடுபடுதலும்.

ஒரு மனிதன் இந்த உலகத்தில் உயிர் தரிக்கும்போதே கவலையும் அவனுடன் சேர்ந்து பிறந்து விடுகிறது.
வேலைக்கு செல்வோர்கள் என்றால் வேலை பார்க்கும் இடத்தில் உண்டாகும் சிறிய பெரிய நிகழ்ச்சிகள் கவலைகளாக உருவெடுத்து மிகபெரிய மனவியாதியாகிவிடும்.

திருமணமானவர்கள் என்றால் குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள், வாக்குவாதங்கள் கவலைகளாக மறு உருவம் பெற்று அவர்களை சோர்வடைய செய்து விடும்.

இள வயதினராக இருந்தால் நன்பர்களுக்குள் உண்டாகும் சிறு சிறு பிரச்சனைகள்பூதாகரமாக உருவெடுத்து அவை கவலைகளாக மனதில் ஒட்டிகொண்டு விடும். இது போன்று சமுதாயத்தில் இருக்கும் எத்தனையோ மனிதர்களிடையே எத்தனையோ பிரச்சனைகள் அவை கவலைகளாக உருவெடுத்து அன்றாடம் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்து பார்த்தோம் என்றால் உணர்ச்சிகளின் விளைவால் மனிதர்களால் உருவாக்கபடுகின்ற ஒரு மனநோய் தான் கவலை. உணர்ச்சிகளின் பிறப்பிடம் உறவினர்கள், கூட வேலை பார்ப்பவர்கள், நண்பர்கள் போன்றவர்களுடன் பழகும் போதும், பேசும் போதும் பெரும்பாலும் உருவாகும்.

பெரும்பாலான உணர்ச்சிகள் நினைவுகளாக உருவெடுத்து, அந்த நினைவுகள் வாக்கு வாதங்களாகவும்,கோபங்களாகவும் மாறி அளவுக்கு அதிகமாக செல்லுபோது அவை கவலைகளாக உருவெடுக்கின்றது.

ஒருவர் தியான பயிற்ச்சியை தொடர்ந்து செய்யும் போது கவலைகளை திறம்பட சமாளிப்பதற்க்கு திரனை சக்தியை கொடுக்கிறது. கவலைக்கு காரணம் என்ன? கவலை படுவதில் நியாயம் இருக்கிறதா? போன்று ஆழ்ந்து சிந்திக்க செய்து கவலை என்பது ஒரு மாயை என்ற எண்ணத்தை உருவாக்கி கவலையிலிருந்து விடுவிக்க செய்கிறது.

தியான பயிற்ச்சியை ஒருவர் தொடர்ந்து செய்யும் போது எண்ணங்களும் சிந்தனைகளும் ஒழுங்குபடுத்த படுகின்றன. எண்ணங்களும் சிந்தனைகளும் ஒழுங்குபடுத்த படும் போது அல்லது எண்ணங்களும் சிந்தனைகளும் சரியாக இருக்கின்றபோது அங்கு கவலை என்பதர்க்கு பேச்சே இல்லை. தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்து வரும் போது அவர் இந்த மாதிரியான அனுபவத்தை கற்று கொள்கிறார். அந்த அனுபவத்தினை கற்று கொள்ளும்போது அவரை எந்த கவலையும்  அணுகுவதில்லை. ஒரு நாளில் ஒரு சில மனித்துளிகள் மட்டும் செய்யப்படும் தியான கலையினால் கவலை இல்லாத மனைதனாக சந்தோசமாக வாழ்கிறார். வாழ கற்று கொள்கிறார்.

ஒருவர் தியான பயிற்ச்சியை தொடர்ந்து செய்யும்போது அவருடைய சிந்தனை அலைகள் ஒழுங்கு படுத்தபடுகின்றன. சிந்தனை அலைகள் ஒழுங்குபடுத்த படும் போது எதிர் மறையான எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் மனதில் இடம் இல்லை. எதிர் மறையான எண்ணங்களூம் உணர்ச்சிகளுக்கான காரணங்களும் அலசி ஆராயப்படுகின்றன . அலசி ஆராயப்படும்போது  எதிர் மறையான எண்ணங்களும் உணர்ச்சிகளுக்கும் மனதில் இடம் இல்லயென்கிற சூழ்நிலை உருவாகிறது. அதனால் மனதில் கவலைகள் என்பதெற்க்கும் இடம் இல்லை.  

ஒரு நாளில் சில மணித்துளிகள் செய்யபடும் தியான பயிற்ச்சியின் மூலம் ஒரு மனிதன் கவலைகளில் இருந்து விடுபடுவதற்க்கு வாய்ப்பு உருவாகிறது. தியான பயிற்ச்சியை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது மூளையில் சந்தோசத்தை உண்டாக்க கூடிய  சில நரம்புகள் தூண்டப்பட்டு மனிதனுக்கு சந்தோசத்தை கொடுக்கின்றது. தியான பயிற்ச்சியை தொடர்ந்து செய்யும் சிலரிடம் இதை பரிசோதித்தபோது இந்த உண்மை தெரிய வருகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தியான பயிற்ச்சியை தொடர்ந்து செய்யும் போது உடலில் உண்டாகும் மாற்றங்கள் மனதில் அமைதியையும், அன்பையும் உருவாக்குகின்றது மூளையினுடைய அலைகள் ஒழுங்குபடுத்த படுவதால் ஒருவர் சரியாக சிந்தனை செய்ய தொடங்குகிறார். மூளை சரியாக சிந்திக்க தொடங்கும்போது அங்கு எதிர்மறையான எண்ணங்களுக்கும் அதனால் உண்டாகும் கவலைகளும் காணாமல் போய் விடுகின்றன.    தியான பயிற்ச்சியை செய்யும்போது மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை உருவாகிறது.

அந்த சிந்தனை மற்றவர்களிடத்து அன்பையும் நட்புறவையும் வளர செய்கிறது. அன்பும் நட்பு சிந்தனையையும் மேலோங்கி நிற்க்கும்போது அங்கு கவலை என்பதற்க்கு இடம் இல்லை. சந்தோசம் ஒன்றுதான் நீடித்து நிற்க்கும். இன்னும் சொல்ல போனால் மருந்து மாத்திரைகளால் கூட கட்டுபடுத்த முடியாத கவலை என்னும் வியாதியை ஒரு நாளில் சில மணி துளிகள் செய்யபடும் தியான பயிற்ச்சியின் மூலம் முடிவுக்கு கொண்டு வரலாம்..                                

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள