வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி?

ஒருவர் ஒரு நாளில் சிறிது நெரம் செய்யும் தியான பயிற்ச்சி அவருக்கு அளவிட முடியாத சந்தோசத்தை மகிழ்ச்சியை தருகிறது என்றால் அது மிகை யாகாது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம், எதிர்பார்ப்பு, கவலை, ஆதங்கம் இவையெல்லாம் மிகவும் சகஜம். ஆனால் இவையெல்லாம் ஒரு அளவிற்க்கு மேல் சென்றால் அதுவே அவனுக்கு மிக பெரிய வியாதி. இவைகள் எல்லாம் மனிதனின் உணர்ச்சிகளின் வடிகால்கள். இந்த உணர்ச்சிகளை ஒரு கட்டுபாட்டிர்க்குள் ஒரு எல்லைக்குள் வைத்திருக்கும் ஒரு அற்புதமான கருவிதான் தியானம்.

மருத்துவ உலகமே ஒத்து கொள்ளும் ஒரு உண்மை என்னவெண்டறால்  ஒரு நாளையில் சிறிது நேரம் செய்யபடும் தியான பயிற்சியினால் மனிதர்களின் உணர்சிகளின் வெளிப்பாடுகளான கோபம்,கவலையினால் உண்டாகும் வியாதிகளில் இருந்து பாதுகாப்பது மட்டும் அல்லாது உணமையான சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது அல்லது இருக்கும் சந்தோசத்தை அதிகரிக்கின்றது என்பதுதான். 

அடிக்கடி கோபப்படுதலும், கவலைபடுதலும் நாளடைவில் இதயம் சம்பந்தபட்ட நோய்களுக்கும் ரத்த கொதிப்பு சம்பந்தபட்ட வியாதிகளுக்கும் ஆளாக நேரிடும். இன்னும் சிலருக்கு  புற்று நோயும் உண்டாகுவதற்க்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் மருந்து மாத்திரைகளுக்கு கட்டுபடாத வியாதிகள் கூட தியான பயிற்ச்சிக்கு கட்டுபட்டு நிவாரணம் பெறுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு மனிதனுக்கு சொத்து சுகம் இல்லையென்றாலும் வியாதிகள் இல்லாமல் இருந்தால் அதுவே அவனுக்கு கிடைக்கும் மிக பெரிய சந்தோசம் மகிழ்ச்சி. .    

கடந்த கால நினைவுகளையோ அல்லது எதிர் கால நிகழ்வுகளை நினைத்து கவலைபடாமல் இன்று என்ன நடக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் நினைக்க செய்து மனதினை தெவையில்லாமல் கவலைபட செய்யாமல் இருந்தாலே அதுவே அவனுக்கு மிக பெரிய சந்தொசத்தையும் மகிழ்ச்சியையும்  தரும். அந்த சந்தோசத்தை தியானம் மட்டுமே கொடுக்கவல்லது என அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.  அது மட்டும் அல்லாது அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சந்தோசமாகவும் மகிழ்ச்சியுடனும்  வாழலாம்.   

பெரும்பாலான வியாதிகளுக்கு மூல காரணமே ஒருவருடைய நினைப்புதான். அங்கு இங்கு என்று சுற்றி திரியும் மனதை தியானம் தொடர்ந்து செய்வதின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அப்படி கட்டுக்குள் வைத்திருக்கும் போது சந்தோசமும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனதினால் தேவையில்லாத நினைவுகளினால் உண்டாக்கபடும் வியாதிகளையும் தடுத்து நிறுத்தலாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.  

தியானம் ஒரு மனிதனை சரியாக சிந்தனை செய்ய வைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. மனித சிந்தனை சரியாக இருக்கும் போது அங்கு தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் இல்லை. தேவையில்லாத சிந்தனைகள் இல்லாத பட்சத்தில் அங்கு மகிழ்ச்சி நிலவும். உடம்பில் தேவையில்லாத
வியாதிகள் குடியேறுவதற்க்கும்  வாய்ப்பு இல்லை அதனால் உடல் ஆரொக்கியத்திற்க்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை.

ஒருவர் எதற்க்கு எடுத்தாலும் கோபபடும் மனப்பாண்மையை விட்டார் என்றாலே அவருக்கு சந்தோசத்திற்க்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை. ஒருவருடைய கோபத்திற்க்கு மூல காரணமே உனர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கும்போதுதான். பந்தம், பாசம், உற்றார், உறவினர்கள் போன்றோரின் உணர்ச்சிகளுக்கு, பேச்சுக்கு, செயல்களுக்கு  இடம் கொடுக்கும் போது அங்கு அறிவு கண் மூடப்பட்டு விடும். அறிவு கண் மூடப்பட்டிருக்கும் போது அங்கு சந்தோசம், மகிழ்ச்சி என்பது இருக்காது. அறிவு கண் திறக்கப்பட்டு உணர்ச்சிகளின் உண்மையான காரணம் என்னவென்று தெரியும் போது அங்கு கோபம் என்பது இருக்காது. கோபம் என்பது இல்லை என்றால் அங்கு சந்தோசமும் மகிழ்ச்சியும்  நிரந்தரமாக குடியேறும்.

ஒருவருடைய அறிவு கண்களை திறக்கும் சக்தி தியானத்திற்க்கு மட்டும் தான் உண்டு. ஒருவர் தியான பயிற்ச்சியை தொடர்ந்து பழக்கபடுத்தும் போது அவருக்கு சந்தோசத்திற்க்கும் மகிழ்ச்சிக்கும்  பஞ்சமே இல்லை. 

இந்த வலைப்பதிவின் தியான பயிற்சியாளரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.     
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள