துக்க நினைவுகளில் இருந்து விடுபடுவது எப்படி?


துக்கத்தினால் துவண்டு போகாதவர்கள் யாரவது இந்த உலகத்தில் உண்டா? நிச்சயமாக இருக்க முடியாது.

துக்கத்திளேயே மிகவும் மனதை கஷ்டபட செய்வது அல்லது கவலை பட செய்வது என்பது ஒருவருடைய இழப்பு. ஒரு குடும்பத்தில் ஒரு குடும்ப தலைவருடைய திடீர் இழப்பு அந்த குடும்பத்திற்க்கு மிகபெரிய துக்கம். கணவனுக்கு மனைவியுனுடைய திடீர் இழப்பு ஒரு மிக பெரிய துக்கம். மனைவிக்கு கணவனுடைய திடீர் இழப்பு ஒரு மிக பெரிய தாங்கமுடியாத கவலை. 

இது போன்று எத்தனையோ மனிதர்களின் திடீர் இழப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தாருக்கு மிக பெரிய துக்கம்.

அவர்களுடைய இழப்பை சில காலம் மறந்து இருந்தாலும் மறுபடியும் அவர்களை பற்றிய நினைவு வரும் போது தாங்கமுடியாத துக்கம் அவர்களை மிகவும் கவலையடைய செய்யும். அவர்களை பற்றிய நினைவு அவர்களை எந்த வேலையையும் செய்ய விடாமல் முடக்கி போட்டு விடும். அவர்களிடம் உள்ள தன்னம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்து அவர்களை ஒரு நடை பிணமாக்கி விடும். சில நேரங்களில் பைத்தியம் போன்ற சூழ் நிலைக்கு தள்ளபட்டு விடுவார்கள்.      

அன்புக்குறியவர்களின் இழப்பு சிலருக்கு உடல் ரீதியாகவும் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும். காரணம் அவர்களை பற்றிய நினைப்பு அடிக்கடி வந்து அவர்களை வாட்டும் போது அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிப்பு உள்ளாகிறார்கள். அவர்களுடைய நினைப்பு உடல் ரீதியாக ஒரு களைப்பையும் உண்டாக்கும். இந்த நிலை தொடரும்போது அது ரத்த கொதிப்பு வியாதியாக கூட மாறுவதர்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

இது போன்று துக்கத்தை மறக்க முடியாமல் அவதி படுபவர்களுக்கு தியானம் மூலம் விடிவு கிடைக்குமா? 

ஒருவர் தியான பயிற்சியை தொடர்ந்து செய்து வரும் போது மாயையான காரணங்களிலினால் உண்டாகும் வியாதிகளில் இருந்து விடிவு பெறலாம்.   

தியான பயிற்ச்சியை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது உலக நியதி என்ன? இயற்க்கையின் விதி என்ன? போன்ற பல விஷயங்களை ஆக்க பூர்வமாக சிந்திக்க செய்யும். அப்படி ஆக்க பூர்வமாக சிந்திக்கும் போது துக்கத்தினால் உண்டாகும் கவலைகளில் இருந்து தியானம் மனதை  விடுதலை அடைய செய்யும்.

தியான பயிற்சியை துக்கத்திலிருந்து  மீள முடியாதவர் தொடர்ந்து செய்யும் போது மனதிற்க்கும் இதயதிற்க்கும் உன்மையான ஆறுதலை அடைய செய்கிறது. அப்போது உலக நியதி என்ன, இயற்க்கையின்  விதி என்ன, உண்மை எது, போலி எது போன்ற பல உண்மையான நியதிகளை உணரசெய்து அவரை துக்கதினால் ஏற்படும் மன கவலைகளில் இருந்து துக்கத்திலுருந்து விடுவிக்கசெய்யும்.