குடி பழக்கத்திலிருந்து தியானத்தின் மூலம் விடுதலை கிடைக்குமா?

ஏற்கனவே கோடி கணக்கான மக்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தங்களையும் மறந்து தங்களை சார்ந்தவர்களையும் போதையில் மறந்து மயக்க நிலையிலேயே தினமும் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

வயிற்றிக்கு உணவு சாப்பிட்டு பசியை போக்குவது போல குடித்தால்தான் உயிர் வாழ முடியும் என்பதை போல சிலர் நாள் தவறினாலும் குடிக்க தவறுவதில்லை.

ஒரு நாளில் ஒரு வேலை மட்டும் அல்ல சிலர் மூன்று வேலையும் உணவு சாப்பிடுவது போல குடித்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் சிலர் நேரம் காலம் எல்லாம் கிடையாது எப்ப எப்ப நேரம் கிடைக்கிறதோ அப்ப அப்ப குடித்து கொண்டே இருக்கின்றனர்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இவர்களை கல்யாணம் செய்த மனைவி மார்களும், பெற்றவர்களும், பிள்ளைகளும் இவர்கள் போதையில் நடத்தும் ஆட்டத்திற்கு ஊறுகாய்கள். படாத பாடு படுவார்கள்.

இன்னும் சில குடிமகன்கள் பெத்த பிள்ளைகள்,  கட்டிய மனைவி என்றும் கூட பாராமல் கொலையும் செய்வதற்கு துணிந்து விடுகின்றனர். போதை தெளிந்த பின்புதான் ஐயோ கொலை செய்து விட்டோமே என்று கத்துவார்கள் கதறுவார்கள் கதறி என்ன பிரயோஜனம் போன உயிர் திரும்பி வருமா?

சரி ஒரு கொலையே நடந்து விட்டதே இனி குடிக்காமல் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? அன்றைக்கே மறுபடியும் குடிக்க ஆரம்பித்து விடுவான். கேட்டால் துக்கம் தாங்க முடியவில்லை என்பான்.

இது போன்ற போதை குருக்களை தியானத்தின் மூலம் திருத்த முடியுமா?

திருத்த முடியும் என ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. தியானம் பழகும்போது மன அமைதியும், மன நிறைவும் ஏற்படுகின்றது. இந்த மன நிறைவும் மன நிம்மதியும் குடிக்க வேண்டும் என்ற நினைவை மாற்றுகிறது.  

தியானம் பயிற்சி செய்யும்போது உணர்ச்சிவச படுதலில் இருந்தும், ஆவலில் இருந்தும் விடுபட செய்கின்றது. மனக்குமுறல்கள், தேவை இல்லாத பயம் இவைகள் அனைத்தும் தியான பயிற்சி செய்யும்போது குறையும்

குறையும்போது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் மறக்க பட செய்ய படுகிறது  . நிறைய குடிகாரர்கள் பயத்தை மறைப்பதற்காகவே மற்றவர்களுக்கு முன்பு தான் ஒரு தைரியசாலி என்று காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே குடிக்கிறார்கள்         

தியானத்தின் மூலம் மனது, உடம்பு பலப்படும் போது ஒருவருக்கு குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய் விடுகிறது.

எனவே குடி பழக்கத்தில் இருந்து ஒருவர் விடுபட வேண்டும் என்றால் தியானம் என்னும் பக்க விளைவில்லாத மருந்தை எடுத்து கொண்டால் மது என்னும் அரக்கனிடம் இருந்து விடுபடலாம்

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள