தியானத்தினால் எப்பொழுதும் இளமையாக இருக்க முடியுமா?

தியான பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது வயதான தோற்றம் எற்படுவதுர்க்குண்டன விஷயங்கள் இல்லாமல் செய்து விடுகிறதாக சில ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.  தூங்கி எழுந்து கிடைக்கும் புத்துணர்ச்சியை விட  தினமும் தியான பயிற்சி செய்யும்போது கிடைப்பதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

ஒருவர் சாப்பிடும் உணவு சரி வர செரிமானம் ஆகும் போதும் நல்ல நிறைவான தூக்கமும் கிடைக்கும்போதும் வயதான தோற்றம் என்பது அவரை நெருங்காது.

தொடர்ந்து ஒருவர் தியானம் செய்யும்போது  உடலில் உற்பத்தியாகும் மெலடோனின் அளவு அதிகமாகிறது என மருத்துவ ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. இந்த மெலடோனின் தான் ஒருவருடைய வயதை அல்லது வயதானது போல் தோன்றும் முக தோற்றத்தை தள்ளி போட செய்யும் காரணியாகும்.

மெலடோனின் உடலுக்கு தேவையான சக்தியையும் தேவையான தூக்கத்தையும் கொடுக்கின்றது அதனால் வயதான தோற்றம் அல்லது உடல் வயதானது போல் தோற்றமளிக்கும் முக பாவனைகளையும் தள்ளி போட செய்கிறது. உடலில் உற்பத்தியாகும் மெலடோனின் சில வகை புற்று நோய்களுக்கு கூட சிறந்த நிவாரணியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது         

ஒருவர் இள  வயதிலேயே வயதானவர் போல் தோற்றம் அளிக்க காரணம் மனக்கவலை அல்லது மன கவலையினால் உண்டாகும் மன அழுத்தங்கள்.
இந்த மன அழுத்தங்கள் உங்களது செரிமானம் செய்யும் சக்தியை குறைகின்றன. செரிமானம் செய்யும் சக்தி குறையும்போது பலவிதமான நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது  செரிமானம் சரியாக ஆகாதபோது  உங்களுக்கு கிடைக்க வேண்டிய சரியான தூக்கமும் பாதிக்கபடுகின்றன.

தூக்கமும், சாப்பிட்ட உணவும்    நன்றாக செரிமானம் ஆகும்போது மனமும் உடலும் ஆரோக்கியமாகி, மன அமைதி ஏற்படுகிறது. மன அமைதி உண்டாகும் போது மன அழுத்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கின்றது. மன அழுத்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்போது மன கவலைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது. மனதில் கவலைகள் இல்லாதபோது
முகத்தில் இளமை தெரிகிறது. .      

தியானம் செய்பவர்களையும் தியானம் செய்யதவர்களையும் வைத்து சோதனை செய்த பொழுது தொடர்ந்து தியானம் செய்தவர்கள் கிட்டத்தட்ட 12 வருடங்கள் குறைவான வயது உடையவர்களாக, இளமையாக தெரிவதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

புதிதாக தியான பயிற்சி தொடங்குபவர்களுக்கு கூட  சில காலங்களிலேயே முகத்தில் ஒரு தெளிவு கிடைக்கின்றது. இந்த தெளிவு அவர்கள் முகத்தில் இளமையை மிளிர செய்கிறது.  

எனவே  தியானம் என்பது மனதாலும் உடலாலும் ஒருவரை இளமையாக இருக்க செய்கிறது என்பது சரியான தீர்வாகும்.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள