ரத்த அழுத்த பிரச்சினையில் இன்று பெரும்பாலானோர் அவதி பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.
சரி இந்த ரத்த அழுத்த நோய் ஏன் உண்டாகிறது?
மன அழுத்தங்கள் உடலில் ரத்த ஓட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த அழுத்தங்கள் உண்டாகுவதற்கு காரணம் என ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.
ரத்த அழுத்தங்கள் என்றால் அதிக ரத்த அழுத்தமோ அல்லது குறைவான ரத்த அழுத்தமோ ஏற்படுகின்றன.
அதிக ரத்த அழுத்தம் இருந்தாலும் ஆபத்து. குறைவான ரத்த அழுத்தம் இருந்தாலும் ஆபத்து.
மன அழுத்தங்கள் என்பது மனதில் உண்டாகும் கவலைகளினால் ஏற்படுவதுதான்.
இந்த கவலைகள் பல வித காரணங்களினால் உண்டாகும்.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மன அழுத்தம் உண்டாகி அதன் மூலம் கவலை உண்டாகும்.
பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு அதன் மூலம் மன அழுத்தம் உண்டாகி கவலை உண்டாகும்.
பிடித்தம் இல்லாத வேலையை பல வருடங்களாக செய்யும் போது மன அழுத்தம் ஏற்பட்டு அதன் மூலம் கவலை உண்டாகும்.
அவசரமாக ஒரு இடத்திற்கு செல்லும்போது செல்லும் வாகனம் ரிப்பேர் ஆகி
குறித்த நேரத்தில் செல்ல முடியாதபோது மன அழுத்தம் ஏற்பட்டு அதன் மூலம் கவலை உண்டாகும்.
இதுபோன்று ஒரு பொருளை தொலைத்துவிட்டு அதை தேடும் போது, தேவை இல்லாத வாக்கு வாதங்களில் உணர்சிகரமாக பேசும் போது, போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொள்ளும்போது, குறித்த நேரத்தில் ஒரு வேலையை முடிக்கமுடியாமல் போகும் போது, தூக்கமின்மையால் தவிக்கும்போது,
வேலை செய்யும் இடத்தில ஏற்படும் வேலை சுமை, தனிமையில் இருக்கும்போது, காத்துகொண்டு இருக்கும் போது, வரிசையில் நிற்கும்போது,
அதிகமான சத்தத்தை கேட்கும்போது, சிலருடைய நடவடிக்கைகளை ஏற்று கொள்ள முடியாத போது போன்ற காரணங்களினால் ஒருவருக்கு மன அழுத்தம் வரலாம். அந்த மன அழுத்தங்களே பிற்பாடு கவலைகளாக மாறுகிறது. கவலைகள் கோபமாக மாறுகிறது.
சிலருக்கு அதிகமாக கோபப்படும் போது முகமெல்லாம் சிவந்து காணப்படும். அதற்க்கு காரணம் அந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அவருடைய ரத்த ஓட்டத்தின் அளவு வேகமாக உடலில் பாய்வதால் முகம் சிவந்து காணப்படும்.
கவலைகளாக மாறும்போது உடலில் ரத்த அழுத்தத்தின் அளவு சாதரணாமாக இருக்க வேண்டிய அளவை விட கூடுதலாகவோ குறைவாகவோ உண்டாகிறது.
இதே நிலை தொடரும்போது உடலின் சில பாகங்கள் சரிவர இயங்காது பிறகு நாளடைவில் அந்த உறுப்பே எப்போதுமே இயங்காத அளவிற்கு வந்து உயிருக்கே ஆபத்தான சூழ்நிலைக்கு வந்து விடும்.
இவை அனைத்திற்கும் காரணம் கவலைதான். அந்த கவலைதான் உடலில் ரத்த ஓட்டத்தின் வேகத்தை வித்தியாச படுத்தி ரத்த அழுத்தம் எனும் வியாதியை உண்டாக்குகிறது.
கவலை என்பதே மனது சரியாக தன்னுடைய வேலையை செய்யாதபோது ஏற்படுகின்றது. அதாவது சரியாக சிந்தனை செய்யாதபோது. மனது சரியாக சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டால் ஏன் கவலை படவேண்டும், கவலை பட்டு நடக்காமல் இருக்க போகிறதா அல்லது நடப்பதை நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா என்று சிந்தனை செய்தோம் என்றாலே கவலை வராது.
அதே போன்று மன அழுத்தம். சேர வேண்டிய இடத்திற்கு சற்று முன்னதாக
கிளம்பினால் மன அழுத்தம் உண்டாக வேண்டிய அவசியம் இல்லையே?
பிடிக்காதவர்களை விட்டு ஒதுங்கி விட்டோம் என்றால் ஏன் அவர்களை நினைத்து மன வருத்தம் மன அழுத்தம்?
செய்கின்ற வேலையை மனதிற்கு பிடித்தாற்போல் மாற்றி செய்வதற்கு சிந்தனை செய்தோம் என்றால் மன அழுத்தத்திற்கு வேலையே இல்லையே?
இது போன்று சிந்தனை செய்தோம் என்றால் எவ்வளவோ வழி கிடைக்கும்?
மன கவலைகள் உண்டாக வேலை இல்லை. மன கவலைகள் இல்லையென்றால் மன அழுத்தங்கள் ஏற்ப்பட வேலை இல்லை. மன அழுத்தங்கள் இல்லையென்றால் ரத்த ஓட்டம் உடலில் சீராக இருக்கும். சீராக ரத்த ஓட்டம் இருந்தால் ரத்த அழுத்த நோய்க்கு வேலை இல்லை.
சரி இதுபோன்று மனதை பழக்க என்ன செய்ய வேண்டும். அதற்குதான்
தியானம் என்ற கலையை நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நாம் பயன்பட்டு
நம் மனகவலைகள் மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு அதனால் உண்டாகும் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளில் இருந்து விடுபட வேண்டும்
என்று பல வருடங்களுக்கு முன்பே சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.
எனவே தியானம் என்னும் அறிய கலையின் மூலம் கவலைகள் மன அழுத்தம் மூலம் உண்டாகும் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளில் இருந்து விடுபடலாமே?