கவலையிலிருந்து விடுபடுவது எப்படி?

கவலை என்பது மனது சம்பந்தப்பட்டது. கவலை என்பது மனிதர்களை விரைவாக தொற்றி கொள்ளும் நோய் போன்றது. ஒரு விஷயத்தை பற்றி நினைக்கும்போது அதில் உள்ள நல்ல விசயங்களை பற்றி நினைக்காமல் அதில் உள்ள கெட்ட விசயங்களை பற்றி நினைக்கும்போது பயம் உண்டாகிறது. அந்த பயமே உடனே கவலையாய் தொற்றி கொள்கிறது.

உதாரனத்திற்க்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்க்காக சுற்றுலா ஸ்தலம் செல்வதற்கு முடிவு செய்து விட்டீர்கள். சுற்றுலா ஸ்தலம் செல்வதை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கபோவதை நினைத்து ரொம்ப சந்தோசமாக இருக்கறீர்கள். நாளைக்கு சுற்றுலா தளத்திற்கு செல்லவேண்டும்

அடுத்த நாள் காலை செய்திதாளில் எங்கோ சுற்றுலா தளத்திற்கு சென்ற பஸ் மலையில் கவிழ்ந்து சிலர் இறந்துவிட்டனர் என்ற செய்தி வருகிறது.
உடனே உங்களது மனது என்ன நினைக்கும்? ஐயோ நாம் நாளை செல்லும் பஸ்சும் மலையில் கவிழ்ந்து நாமும் இறந்து விடுவோமோ என்ற பயம் உங்கள் மனதை கவ்வி அதுவே உங்களை கவலை அடைய செய்து விடும். சந்தோசமாக உங்கள் குடும்பதர்ருடன் இருக்க வேண்டிய சூழ்நிலையை கவலை கொண்ட சூழ் நிலையாக உங்கள் மனது மாற்றி விடும். அதாவது நடக்காத ஒரு நிகழ்ச்சியை நடந்து விடுமோ என எண்ணி பயந்து அந்த பயமே கவலையாக மாறி விடுகிறது. இதுதான் மனதின் சித்து விளையாட்டு.

இந்த கவலை பயமாக மாறி அதோடு நின்று விட்டால் பரவாயில்லை. மேற்கொண்டு ஒவ்வொரு வியாதிகளுக்கும் காரணமாகி விடுகின்றது.
தூக்கமின்மை, ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி, போன்ற வியாதிகளுக்கு
கவலை என்பது மூல காரணமாகி விடுகிறது.

மனது சரியாக சிந்திக்க தெரிந்து விட்டால் மனிதர்களுடைய வாழ்வில் என்றுமே மகிழ்ச்சிதான். மனது சரியாக சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அங்கு பயம் என்பதற்கு வேலை இல்லை. பயம் இல்லையென்றால் கவலை இல்லை.

மனதை சரியாக சிந்திக்க செய்யும் கருவி தியானம் மட்டும்தான். தொடர்ச்சியாக தியானம் செய்யும் போது மூளை அலைகள் ஒழுங்கு படுத்த
படுகின்றன.

எப்படி சரியான அலைவரிசை கிடைக்கும்போது தொலை காட்சியில் துல்லியமாக படங்கள் தெரிகின்றனவோ அதுபோன்று மூளை அலைகள் ஒழுங்காக வேலை செய்யும்போது அவை மனதை சரியாக சிந்தனை
செய்ய தூண்டுகின்றன.

மனது சரியாக சிந்தனை செய்யும்போது அங்கு கவலை என்பதற்கு வேலையே இல்லை.

எனவே தியானம் என்ற அற்புதமான கலையின் மூலம் மனதை சரியாக சிந்தனை செய்ய வைத்து கவலை என்ற வியாதியில் இருந்து விடுபடுவோம்.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள