தியான பயிற்சியினால் மாணவர்களுக்கு நன்மை உண்டா?


பொதுவாக இந்த காலத்து மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் ஏகப்பட்ட
இடையூறுகள். படிப்பில் கவனத்தை சிதற செய்யும் அளவிற்கு வெளி புற
சூழ்நிலைகள்.

தொலைக்காட்சி, இன்டர்நெட், செல் போன்  போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமாக மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து வெகுவாக
பாதிக்க செய்கிறது. இவற்றில் மிகவும் அதிக பாதிப்பு தருவது செல் போன் தான்.

இவற்றை தவிர சக மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து பரிட்சையில்
தேர்ச்சி பெற வேண்டும். சாதரணமாக தேர்ச்சி என்பது இப்போது சர்வ சாதாரணம். அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் தான்
விரும்பிய மேல் கல்வி படிக்க முடியும். இல்லையென்றால் தேர்ச்சி பெற்றும் பிரயோசனமில்லை.

படிக்கும் காலத்தில் படிப்பை தவிர வேறு சிந்தனைகளில் செயல்களில் மனம் சென்றால் படிப்பை கோட்டை விட்டு விட்டு பிற்காலத்தில் மிகவும் வருத்தப்பட வேண்டி வரும்.  அப்போது படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வந்தாலும் பிரயோசனமில்லை.

அதனால்தான் காலத்திலேயே பயிர் செய் என்ற பழமொழி உண்டு. எந்த காலத்தில் பயிரை உற்பத்தி செய்தால் நமக்கு உணவுக்கு பயன்படும் என்று தெரிந்து உற்பத்தி செய்யவேண்டும். காலம் கடந்து உற்பத்திசெய்த பயிர் பயிரும் விளையாது யாருக்கும்  பிரயோசனமில்லை.

அதனால் படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும். விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டும். இரண்டையும் மாற்றி செய்தால் இரண்டுமே
உருப்படி ஆகாது.

எதை எந்த நேரத்தில் செய்யவேண்டும், எதை செய்யகூடாது, எந்த பழக்கம் கெட்ட பழக்கம், யார் நல்லவர், யார் கெட்டவர் போன்றவைகளை பகுத்தறிந்து மாணவர்களுக்கு உணர்த்துவது மனம்தான்.

அந்த மனதை தங்களுடைய கட்டு பாட்டில் வைத்து கொள்ளும்போது எதை எப்போது செய்யவேண்டும் என்ற தெளிவு மாணவர்களுக்கு உண்டாகிறது.

மனதை தங்கள் கட்டு பாட்டில் வைத்து கொள்ளும்போது எது நல்ல பழக்கம் எது கெட்ட பழக்கம் என்பதை சுலபமாக உணர செய்து நல்ல பழக்கத்தில் மட்டுமே ஈடுபட செய்யும்.

மனதை தங்கள் கட்டு பாட்டில் வைத்து கொள்ளும் போது யார் நல்லவர் யார் கெட்டவர் என்று சுலபமாக உணர செய்து கெட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க செய்யும்.

பொதுவாக மாணவர்கள் மனதை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும்போது நல்லதை மட்டுமே பார்க்க செய்யும், நல்லதை மட்டுமே கேட்க செய்யும், நல்லதை மட்டுமே செய்ய சொல்லும்.

 மனதை தங்கள் கட்டு பாட்டில் கொண்டு வரும்போது மூளையின் அலைகள்
ஒழுங்குபடுத்தப்பட்டு நினைவு திறன் அதிகமாகிறது. எதை நினைவில் வைக்க வேண்டுமோ அது மட்டும் நினைவில் இருந்து மாணவர்கள் தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிய வைக்கின்றது.

மனதை கட்டு பாட்டில் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான காரியம்.
ஏனென்றால் மனம் ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு வெகு வேகமாக தாவும் இயல்பு கொண்டது. இந்த மனதை கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய ஒரே கருவி தியானம் மட்டும்.

தியானத்தின் மூலமாக மனதை தங்கள் கட்டு பாட்டிற்குள் கொண்டு வரும்போது மாணவர்களால் வியக்கதகும் சாதனைகள் புரிந்து தனக்கும்
தன் குடும்பத்திற்கும் தன் சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கின்றனர்.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள