தியான பயிற்சியும் தூக்கமின்மை நோய் நீங்குதலும்


பொதுவாக ஒருவருக்கு படுத்தவுடன் நன்றாக தூக்கம் வர வேண்டும். உடனடியாக தூக்கம் வரவில்லைஎன்றாலும் ஒரு அரை மணி நேரத்திற்குள் தூக்கம் வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் அது மன சம்பந்தப்பட்ட பிரச்னை ஆகும்.

ஒருவருக்கு தூங்குவது அல்லது தூக்கம் வராமல் இருப்பது ஒரு பிரச்னை என்றால் அதற்க்கு முக்கிய காரணம் மன அழுத்தங்களினால் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறார் என்று தான் அர்த்தமாகும்.

மன அழுத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டிருகிறார் என்றால் அதற்க்கு பலகாரணங்கள் உண்டு. குடும்ப சூழ்நிலைகள், குடும்ப சூழ்நிலைகளினால் உண்டாகும் மன கவலைகள் இவை அனைத்தும் மனதில் குப்பை போல தேங்கி
மன அழுத்தங்கள் என்று கூறப்படுகிறது.

இந்த மன அழுத்தம் சதா சர்வ காலமும் எதையாவது சிந்தித்து கொண்டே இருக்க செய்யும். உருப்படியான விசயங்களை எதையும் சிந்திக்க செய்யாது.
அதன் விளைவாக மனம் எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டே இருக்கும். மனதில் கனமாக இருக்கும் போது தூக்கம் கண்டிப்பாக வராது.
மனது சுமையில்லாமல் இருந்தால்தான் படுத்தவுடன் தூக்கம் வரும்.

குடும்ப வாழ்க்கை, தொழில், வேலை இவைகளினால் ஏற்படும் பிரச்சனைகள்
மன அழுத்தமாக மாறுகிறது. பிரச்சனைக்கு உரிய காரணங்கள் கண்டறிய படாததால் அவை மன அழுத்தமாக மாறுகிறது. இந்த மன அழுத்தம் தான் தூக்கமின்மைக்கு முக்கிய காரணம்.

சரி இந்த மன அழுத்தங்கள் களைவதற்கு என்ன வழி?

தியானத்தினால் மன அழுத்தங்களை களைய செய்யலாம். தியானத்தினால் மன அழுத்தம் உண்டாகப்படும் காரணங்கள் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு தீர்வு காணபடுகிறது. அதனால் மன அழுத்தங்கள் மனதை விட்டு அகன்று மனது இலகுவாகி விடுகிறது.

மனது இலகுவாகிவிடும்போது தூக்கமின்மை என்பது ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை.

கடந்த பனிரெண்டு வருடங்களாக தூக்கமாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் வரும் என்ற நிலையில் உள்ள ஒருவர் என்னிடம் தியான பயிற்சி சேர்ந்த பதினைந்து நாட்களில் தூக்கமாத்திரையை தவிர்த்து தன்னையும் அறியாது
பல மணி நேரம் தூங்க முடிகிறது என்பதை கூறும் போது தியானத்தின் மகிமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
.
பக்க விளைவுகள் கொண்ட தூக்க மாத்திரை போன்ற மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பையும் கெடுத்து வியாதியுடன் அவஸ்தை படுவதற்கு தூக்க மின்மையால் அவஸ்தைபடுபவர்களுக்கு தியானம் ஒரு சரியான தீர்வு.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள