தியான பயிற்சியும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகுதலும்.


தியான பயிற்சி என்றாலே பொதுவாக இதயம் சம்பந்தப்பட்டது.  கண்களை மூடி தியானம் செய்கின்றபோது இதயத்தின் இயக்கத்தை நாம் உணர முடியும்.

சாதரணமாக ஒரு நிமிடத்திற்கு அறுபது தடவைக்கு மேல்  துடிக்ககூடிய
இதயம் தியானத்தின்போது மிக குறைவான எண்ணிக்கையில்தான் துடிக்கின்றது.

தியானத்தில் முழுகி இருக்கும்போது இதய துடிப்பு இருக்கின்றதா இல்லையா என்கிற அளவுக்கு இதயம் மெதுவாக துடித்து கொண்டு இருக்கும். ஆனால் இதயம் அதன் பணியை செய்து கொண்டு இருக்கும்.

பொதுவாக எந்த ஒரு சாதனமும் அதிகமாக இயங்கும்போது உள்ளிருக்கும் பொருட்களின் உழைக்கும் திறன் குறையும். அதன் விளைவாக சாதரணமாக அது உழைக்ககூடிய காலத்திற்கு முன்பாகவே கெட்டு பொய் விடுகிறது.

உதாரனத்திற்க்கு  உங்களிடம் உள்ள மோட்டார் சைக்கிளையே எடுத்து கொள்ளுங்கள். சாதரணமாக உபயோகபடுதுவதை விட அதிக பட்சமாக
அந்த மோட்டார் சைக்கிளை உபயோகபடுத்தினால் அடிக்கடி ரிப்பேர் ஆகி செலவுகளை ஏற்படுத்தும்.

ஒரு கால கட்டத்தில் அந்த மோட்டார் சைக்கிளை உபயோக படுத்துவதற்கு இயலாத நிலைமையில் பழைய இரும்பு வியாபாரி கூட வாங்குவதற்கு யோசனை செய்யும் நிலைமைக்கு உபயோகமற்றதாகி விடும்.

அதே தத்துவம்தான் இதயத்திற்கும்.  தியானம் செய்யும்போது இதயமானது மிக குறைவான அளவே துடிப்பதால் இதயத்தின் உழைக்கும் திறன் அதிகமாகிறது. இதயமானது அவ்வளவு சீக்கிரம் பளுதடைவது இல்லை.

இதயத்தின் இயக்கம் அதிகபட்சமாக இல்லாமல் தேவையான அளவு இயக்கப்படும்போது மனதுக்கு நல்ல ஓய்வு கிடைக்கின்றது. மனதிற்கு ஓய்வு கிடைக்கும்போது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து மனிதர்களுக்கு விடிவு  கிடைக்கின்றது.

தியான பயிற்சி ஆசிரியர் சொல்லிகொடுக்கும் முறையில் தியான பயிற்சி செய்தால் இந்த உண்மையை உணர்ந்து பயன் பெறலாம்.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள