செய்யும் வேலையை தொழிலை மகிழ்ச்சியுடன் செய்வது எப்படி?

ஒருவர் என்ன வேலை வெண்டுமானாலும் செய்யலாம். ஒருவர் தினமும்  வேலை செய்தாலும் திருப்தியில்லாமல் வேலை செய்யும்பொது அந்த வேலை செய்தும் பிரயொஜனமில்லை. ஒருவர் தொடர்சியாக தியானம் செய்யும்பொது அவரையும்  அறியாமல் அவர் செய்யும் வேலையில் ஒரு பிடிப்பை உண்டாக்குகிறது. ஒரு திருப்தியின்மையை உண்டாக்குகிறது.

தியான பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்யும் போது தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளிடத்தில் நல்ல உறவை ஏற்படுத்தும் மன நிலையை உண்டாக்குகிறது. இது போன்று கூட வேலை பார்ப்பார்களிடமும் மேல் அதிகாரிகளிடத்திலும் நல் உறவு  பேணும்போது அவருக்கு தான் செய்யும் வேலையில் திருப்தி உண்டாகிறது. தான் வேலையை விரும்பி செய்யும் மனப்பான்மை உண்டாகிறது. இது போன்ற மன நிலைதான் தான் பார்க்கும் வேலையில் உயர் பதவிக்கும்,  பதவி உயர்வு கிடைக்கவும் வழி செய்கிறது.          

தியான பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்யும் போது மனதில் எதிர் மறையான  எண்ணங்கள் நீக்கபட்டு அவர் செய்யும் வேலையில் ஒரு ஈடுபாட்டை உண்டாக்கும்.  வேலையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை அவருடன் வேலை பார்ப்பவர்களும் அவருடைய மேல் அதிகாரிகளும் வெகு சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள். அந்த கண்டு பிடிப்பானது அவர்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு  ஒரு மதிப்பையும் மரியாதையையும்  உண்டாக்கும். அந்த மதிப்பும் மரியாதையும் பிற்காலத்தில் அவருக்கு தான் வேலை செய்யும் இடத்தில் பல நண்மைகளை செய்யும்.
தியான பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது வேலையில் ஏற்படும் இடஞ்சல்களை, திருப்தியின்மையை மிக சுலபமாக களைவதர்க்கு வழி செய்கிறது. அதனால் தான் செய்யும் வேலையில் அவருக்கு இயற்கையாக ஒரு ஈடுபாடு உண்டாகிறது.  

தியான பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது ஒருவருக்கு தான் செய்யும் வேலையில் பொறுப்பு உண்டாகிறது. ஒருவர் தான் செய்யும் வேலையை பொறுப்புடன் செய்யும்போது மேல் அதிகாரிகள் அவர் செய்யும் வேலையை விரும்புவர் அவருக்கு நல்ல பெயரும் கிடைக்கும்.                

ஒருவர் தான் வேலை பார்க்கும் நிருவனத்தில் பதவி உயர்வு பெற வேண்டும் என்றால் தான் பார்க்கும் வேலையை பொறுப்புடன் பார்க்கவெண்டும். அடுத்தார் போல் தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் தன்னுடைய மேல் அதிகாரிகளிடத்து நல்ல பெயர் எடுத்திருக்க வெண்டும். தான் வேலை பார்க்கும் தொழிலில் புது புது உத்திகளையும்   விசயங்கலையும் அறிமுகப்படுத்தும் திறமையும் வளர்த்து  கொள்ள வெண்டும்.

ஒருவர் தியான பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது அவர் செய்யும் தொழிலில் புது புது உத்திகளையும்  விசயங்கலையும் அறிமுகப்படுத்தும் திறமையும் வளர்த்து கொள்ள உதவும். தியான பயிற்சி அவருடைய வேலையில் ஒவ்வொரு அசைவிலும் அவருக்கு  திருப்தியை உண்டாக்குகிறது. நிகழ் கால நிகழ்வுகளூக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க செய்து கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் நினைக்க செய்து வேலையில் உண்டாகும் திருப்தியின்மையை கலைகிறது. சரியான காலத்தில் அவர்களுக்கு பதவி உயர்வும் அல்லது வேறு புதிய வேலையை ஏற்று கொள்ள அவருடைய மனதை தயார் படுத்துகிறது.

எனவே ஒருவர் தியான பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது தான் செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்யும் மன நிலையையும் அந்த வேளையில் ஈடுபட்டையும் உருவாக்குகிறது.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள