தியான பயிற்சியின் மூலம் புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியுமா?


இதயம் சம்பந்தபட்ட வியாதிகளுக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஒரு முக்கியமான காரணம் என ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. இதயம் சம்பந்தபட்ட வியாதிகள் மட்டும் அன்றி நுரையீரல் புற்று நோய்கள், புகை பிடிக்கும் பழக்கத்தால் உயிருக்கே ஆபத்து உண்டாக்கும் வேறு பல நோய்கள், உடம்பை முடக்கி போடும் பல வியாதிகள் உண்டாவதற்கு இந்த புகை பிடித்தல் பழக்கம் ஒரு முக்கிய காரணம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ ஆய்வுகள் மனிதர்களின் இறப்புக்கு ஒரு முக்கியமான காரணமாக புகை பிடித்தல் பழக்கம் இருக்கிறது என்று தெரிவிக்கின்றது.  

இன்று புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்க்கு வேறு பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட அவைகளினால் பக்க விளைவுகலும் அதிகம். உடல் உபாதைகலும் அதிகம்.

ஆனால் தியான பயிற்சியின் மூலம் ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்தை விடுகிறார் என்றால் புகை பிடிக்கும் பழக்கத்தால் என்னென்ன தீமைகள் உண்டாகும் என்பதை மனதளவில் உணர்ந்து அந்த புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார். தியான பயிற்சியினால் உடல் அளவில் அல்லது மனதளவில் புகை பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்க்கு அவர் எந்த விதத்திலும் சிரமபடுவதில்லை.

புகை பிடிக்கும் ஒருவரை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட செய்வது கடினம் என்றாலும் கூட தியான பயிற்சியை அவருக்கு பழக்கபடுத்தும்போது நாளடைவில் அவர் புகை பிடிக்கும் பழக்கதிலிருந்து விடுபட அவருடைய மனதில் எண்ணங்கள் உருவாகிறது.

புகை பிடித்தல் பழக்கத்தில் இருந்து ஒருவர் விட முடியாமல் கஷ்டபடுகிறார் என்றால் புகை பிடித்தலால் உண்டாகும் தீமைகள், புகை பிடிக்கும் போது தனக்கு சில நண்மைகள் கிடைப்பதாக அவராக நினைத்துகொண்டு அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் அவஸ்தை படுபவர்கள் ஏராளம்.

சிலர் சொல்லுவார்கள் சிகரெட் குடித்து முடித்தவுடன் எனக்கு சுறுசுறுப்பு கிடைக்கிறது. Tension லில் இருந்து விடுபட சிகரெட் குடிக்கிறேன் என்று சிலர் கூறுவர். இவையெல்லாம் சிகரெட் குடிப்பவர்கள் தாங்களாகவே ஒரு கற்பனை செய்து  கொண்டு இன்று புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்து கொண்டு இருப்பவர்கள் எராளம்.

காரணம் புகை பிடிப்பவர்கள் அவர்கள் புகை பிடிப்பதற்க்கு கற்பனையாக ஒரு காரணத்தை உருவாக்கி கொண்டு, இன்று அந்த பழக்கத்தில்ருந்து மீள முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

தியான பயிற்சியை ஒருவர்தொடர்ந்து செய்யும் போது அவருடைய மனம் எது நண்மை எது தீமை என்பதை உணரசெய்கிறது. அப்படி அவர் உணரும் போது   புகை பிடிப்பதால் உண்டாகும் தீமைகளை எளிதில் உணர்ந்து வெகு விரைவில் அந்த தீய பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்.

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள