சிலர் பார்த்தீர்கள் என்றால் எதற்கு எடுத்தாலும்
பயப்படுவார்கள்.
சிறு குழந்தைகளாகவும் இருந்தால் பரவாயில்லை. அவர்களுடைய
அறியாமை என்று சொல்லலாம்.
பெரியவர்களே தேவை இல்லாமல் பயபடுவார்கள். உடலில்
ஒரு சின்ன பிரச்னை என்றாலும் உடனே அவர்களுக்கு தோன்றுவது ஏதாவது பெரிய வியாதி
நமக்கு வந்து விட்டதோ என்று.
அந்த பயத்துடனே அன்றைய நாள் முழுவதும் நமக்கு
வரக்கூடாத வியாதி வந்து விட்டது. இனி நாம் பிழைப்பது சிரமம். நம் வாழ்க்கை
இத்துடன் முடிந்து விட்டது. அப்படி இப்படி என்று இவர்களாகவே கற்பனைசெய்து கொண்டு
பயந்து கொண்டு அன்றைய நாள் முழுவதும் சோகத்தில் துக்கத்தில் பயத்தில் முழுகி
இருப்பார்கள்.
அதன் பின்பு அவர்களுக்கு வேண்டியவர்கள் யாராவது
வந்து விஷயத்தை கேள்விபட்டு நீங்களே முடிவு பண்ண கூடாது உடனடியாக டாக்டரை போய்
பாருங்கள் என்று சொன்ன பிறகு தான் டாக்டரிடம் செல்வார்கள்.
டாக்டர் பரிசோதனைகள் எல்லாம் செய்து
முடித்துவிட்டு ஒன்றும் பயப்பட வேண்டாம். இது சாதாரண நோய் தான். மூன்று வேலை
மருந்து சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார்.
அப்படி இருந்தும் அவர்களுக்கு நம்பிக்கை
இருக்காது. பயம். டாக்டர் பொய் சொல்கிறார் என்று.
டாக்டர் சொன்னபடி மூன்று வேலை மருந்து சாப்பிட்ட
பிறகு முன்பு இருந்ததை போல மிகவும் சுறுசுறுபாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்போது அவர்களிடம் போய் ஏன் இப்படி பயந்தீர்கள்
என்று கேட்டீர்கள் என்றால் நானா எப்போது பயந்தேன் என்று கேட்டவரை பைத்திய
காரனாகிவிடுவர்கள்.
இது போன்று எத்தனையோ நிகழ்ச்சிகளை சொல்லலாம்.
சிலருக்கு வேலை பார்க்கும் இடத்தில் பயம். வேலையை
பற்றிய பயம். சிலருக்கு தாங்கள் செய்யும் தொழிலில் பயம். இந்த தொழில் நம்மால்
நிரந்தரமாக இருக்க முடியுமா? லாபம் சம்பாதிக்க முடியுமா? போட்ட முதல் திரும்ப
கிடைக்குமா கிடைக்காதா? என்று.
சிலருக்கு எதிர்காலத்தை பற்றிய பயம். நம்மால்
இந்த உலகத்தில் ஜீவிக்க முடியுமா என்று?
மாணவர்களாக இருந்தால் பரிட்சையில் நாம் வெற்றி
பெறுவோமா பாஸ் பண்ணுவோமா என்று?
பெற்றோர்களாக இருந்தால் ஐயோ நம் பிள்ளை நல்ல
பிள்ளையாக இருப்பார்களா அல்லது கெட்டபழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்களா
என்று?
இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?
எங்கோ எப்போதோ நடக்கும் ஏதாவது ஒரு
நிகழ்ச்சியினை அல்லது செயலை மனதில் நினைத்து கொண்டு அல்லது பார்த்துவிட்டு ஐயோ
நமக்கும் அது போல் நடந்து விடுமோ என்று பயப்படுவது.
தொலை காட்சியில் செய்திகளில் காட்டப்படும் விமான
விபத்து, பஸ் விபத்து, ரயில் விபத்து, போன்றவைகளை பார்த்து ஐயோ இனிமேல் நாம் எந்த
வாகனத்திலும் ஏற கூடாது என்று நினைத்தால் என்னவாகும்? வீட்டுக்குள்ளேயே இருக்க
வேண்டியதுதான்.
சரி வாகனத்தில் போகவேண்டாம் இனிமேல் நடந்தே
செல்லலாம் என்றால் அதுதான் மிகபெரிய ஆபத்து. பின்னால் வரும் வண்டி மோதி இடித்து
கீழே தள்ளி விட்டு சென்று விடுவான்.
இதுபோன்ற தேவை இல்லாத நினைப்புகளுக்கு எல்லாம்
என்ன காரணம்?
பயம்.
பயத்திற்கு மூல காரணம் நம்பிக்கையின்மை.
நம்பிக்கையினமைக்கு மூல காரணம் அறியான்மை.
அறியான்மைக்கு மூல காரணம் மனிதனின் சிந்தனை
சக்தி.
மனதின் சிந்தனை சக்தி பாதிக்க படும்போது.
மனது சரியாக சிந்திக்கும்போது அங்கு அறியான்மை
அகற்ற படுகிறது. அறியான்மை அகற்றப்ப்படும்போது அங்கு நம்பிக்கை உருவாக்கபடுகிறது.
நம்பிக்கை உருவாக்கப்படும்போது அங்கு பயம் அகற்ற படுகிறது.
எனவே மனித மனம் தான் பயத்திற்கு எல்லாம் மூல
காரணம்.
மனதை சரியாக சிந்தனை செய்ய வைக்க முடியுமா?
அதற்க்கு ஏதாவது கருவி இருக்கின்றதா? நிச்சயமாக இருக்கிறது. அந்த கருவிதான்
தியானம் என்னும் அற்புத கருவி.
காலம் காலமாக நம் முன்னோர்கள் பழகி வந்த
அற்புதமான கருவி.
அந்த தியானம் என்னும் அற்புத கருவி மூலம் எதை வேண்டுமானாலும்
நீங்கள் சாதிக்கலாம்.அவற்றில் ஒன்றுதான் இந்த பயத்தை ஒழிப்பது.
அந்த தியானம் என்னும் கருவி மூலம் தான் பயத்திற்கு
அடிப்படை காரணமான நம்பிக்கையின்மை, அறியாமை போன்றவற்றை இல்லாமல் செய்து பயத்தை
ஒழிக்கலாம்.