எப்பொழுதும் இளமையுடன் இருக்க செய்யும் தியானம்.

பொதுவாக எல்லோருமே இளமையுடன் இருக்கவே ஆசை படுவார்கள். ஆண்களும், பெண்களும் இதற்க்கு விதி விலக்கல்ல. திருமணம் ஆனாலும் சரி திருமணம் ஆகாவிட்டாலும் சரி தாங்கள் இளைமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது மட்டும் அல்லாமல், மற்றவர்கள் பார்க்கும்போது "எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் "என்று கேட்கும்போது அவர்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.

ஒரு தந்தையும் மகனும் ரோட்டில் செல்லுகின்றனர். எதிரே தந்தையின் நண்பர் வருகின்றார். பையனை பார்த்து தந்தையிடம் கேட்கிறார்"பையன் யார் உங்கள் தம்பியா" என்று. அவ்வளவுதான் அவருக்கு ஒரு கிலோ ஸ்வீட் சாப்பிட்டதை போன்ற பிரம்மை.

அதே போன்றுதான் மகளுடன் செல்லும்போது ஒரு தாயிடம் "இந்த பெண் யார் உங்கள் தங்கையா" என்று கேட்டுவிட்டால் இவருக்கும் ஒரு பெரிய ஐஸ் கட்டியை தூக்கி தலையில் வைத்தது போல் ஆகிவிடும். இளமைக்கு மயங்காதவர் யாரும் இல்லை.

ஒரு வருடம் நகர்ந்தால் ஒருவருக்கு ஒரு வயது கூடுகிறது, ஆம் அவர் இளமையிலிருந்து ஒரு வருடம் கழித்து கொள்ளபட்டு முதுமையில் ஒரு வருடம் சேர்த்து கொள்ளபடுகிறது.

வருடங்கள் நகர்ந்தாலும் மனதாலும் உடலாலும் என்றும் இளமையாக இருக்க முடியுமா? முடியும் அதற்க்கு ஒரு உண்மை சம்பவத்தை கூறுகிறேன்.

அவர் பெயர் ரோசி. ஒரு பட்டம் வாங்குவதற்கு ஒரு கல்லூரியில் சேருகிறார்.
முதல் நாள் வகுப்பு. பேராசிரியர் வகுப்பில் நுழைகிறார். தன்னை அறிமுக படுத்தி கொண்டு "இன்று நம்முடைய வகுப்பில் ஒரு விசேஷமான மாணவியை அறிமுக படுத்துகிறேன்" என்று கூறி ரோசியை அறிமுகபடுத்த சொல்கிறார்.

ரோஸியும் எழுந்து நின்று "ஹலோ என்னுடைய பெயர் ரோசி, என்னுடைய வயது 87 என்கிறார்" அவ்வளவுதான் சக மாணவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.

மாணவர்கள் ரோசியிடம்" இந்த இளம் வயதில் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏன்?" என கேட்கிறார்கள். அதற்க்கு அவர் மிகவும் இளமையான ஒரு பதிலை சொல்கிறார். அந்த பதில் "இந்த கல்லூரியில் ஒரு பணக்கார கணவனை காதலித்து திருமணம் செய்து குழந்தைகள் பெற்று கொள்வதற்காக சேர்ந்துள்ளேன்" என்று வேடிக்கையாக பதில் அளித்தாராம். பதிலிலும் எவ்வளவு இளமை பாருங்கள்.

ஆனால் மாணவர்கள் "இல்லை, எங்களுக்கு சீரியஸ் ஆன பதில் சொல்லுங்கள்" என வற்புறுத்தினர். அதற்கு அவர் "கல்லூரியில் படிக்கவேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாளைய ஆசை அது இப்போதுதான் இந்த 87 வயதில் நிறைவேறியது. என்னுடைய மனதினில் இளமை இருக்கிறது. அதனால் நான் முதுமையை பற்றி கவலை படவில்லை. அதனால் கல்லூரியில் சேர்ந்து படிக்க வந்துள்ளேன்" என கூறினாராம்.

"நான் மனதால் இளமையாக இருப்பதற்கு காரணம் எப்போதும் சந்தோசமாக இருப்பதும், நகைசுவையை அதிகம் ரசிப்பதும் தான் காரணம். மற்றவர்களை புண்படுத்தாமல் நகைச்சுவை உணர்வுடன் ஒவ்வொருநாளும் இருப்பதுதான் காரணம்" என்றாராம்

ஒரு வருடம் காலேஜ் படிப்பு முடிந்து ரோசி எல்லோரிடமும் பிரியா விடை பெற்று சென்றாராம்.

காலேஜ் முடித்த அடுத்த ஒருவாரத்தில் ரோசி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்து மாணவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரியில் படித்த சுமார் 2000 மாணவர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினராம்.

சாக போகிறோம் என்று அந்த 87 வயது பெண்மணி நினைக்க வில்லை. காரணம் அவர் மனதில் எப்போதுமே இளமையுடனேயே இருந்திருக்கிறார்.

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் "சிரியுங்கள் . உங்களுடைய ஒவ்வொரு சிரிப்பும் உங்களுடைய வயதில் ஒரு நாளை குறைக்கின்றது"

அதுபோல "உங்களுடைய வாழ்க்கையில் தேவை இல்லாத எண்களை தூக்கி எறியுங்கள், அவை உங்களது வயது, எடை, உயரம் போன்றவையாக இருக்கட்டும்"

"எப்போதும் இளமையாக இருக்க உங்களை சுற்றி நீங்கள் அதிகம் நேசிக்கும் நபர்களை எப்போதும் வைத்து கொண்டு இருங்கள்"

"எல்லோரிடமும் நீங்கள் அன்பாக இருந்தால் எப்போதும் நீங்கள் இளமையாகத்தான் இருப்பீர்கள்".

இதுவரையில் ஒரு உண்மை சம்பவத்தை படித்தீர்கள். மனது இளமையாக இருந்தால் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று ரோசியின் கதையின் மூலமாக தெரிந்திருப்பீர்கள்.

சரி. ஒருவர் இளமையுடன் இருப்பதற்கு மனது தான் காரணம் என்பதுதான்
உன்மை. அக இளமை மற்றும் புற இளமை. அக இளமை என்பது வெளி தோற்றம். புற இளமை என்பது உடலின் உள்  தோற்றம். அதாவது மனத்தால் இளமையாக இருப்பது. இது இரண்டும் சாத்தியமாவதற்கு ஒருவருடைய மனதுதான் முக்கிய காரணம்.

ஒருவரை இளமையாக இருக்க செய்யும் மனதினை கட்டுபடுத்த ஒரு கருவி தேவை. அந்த கருவிதான் தியானம். ஏனென்றால் மனது ஒரு அலை பாயும் தன்மை உடையது.

இவ்வளவு நேரம் நான் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு இனி எப்போதும் இளமையாக இருக்கவேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கையில், யாரவது எதையாவது சொல்லும்போது, அல்லது ஏதாவது ஒரு மனதை பாதிக்கும் நிகழ்ச்சி நடக்கும்போது   அதில் மனது கலங்கி கவலை படும்போது அந்த மனது இளமையாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது.

அதுபோன்று எந்த சூழ்நிலையிலும் மனது கலங்காமல் இருக்க தியானம் என்ற கருவியின் மூலம் தான் முடியும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் பார்க்கும்போது, கேட்கும்போது, படிக்கும்போது அதில் உள்ள யதார்த்தங்களை மட்டும் தியானம்  மனதிற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கும், எதையும் நினைத்து வருத்தபடுவதினால் எதுவும் ஆக போவதில்லை என்பதை சுலபமாக உணரசெய்யும்.

மனத்தால் கவலை கொண்ட 20 வயது இளைஞர்  40 வயது முதிர்ந்தவராக
காட்சி அளிக்கலாம். 40 வயது கொண்டவர் மனத்தால் இளமையாக இருக்கும்போது வெளி தோற்றத்தில் அவர் 20 வயது இளைஞராக காட்சி அளிக்கலாம்.

ஒருவர் தொடர்ந்து தியானம் செய்யும்போது அவர் முகத்தில் ஒரு பொலிவு இளமைத்தனம் ஏற்பட்டு மற்றவர்கள் பார்க்கும்போது ஆச்சரியப்பட்டு "எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்" என்று  கேள்வி கேட்கும்படி தியானம் செய்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதுதான் தியானத்தின் அறிய சக்தி.  
   

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள