துன்பங்களை எப்படி சமாளிப்பது?

துன்பங்கள் என்பது நிரந்திரம் அல்ல. ஒருவர் காலம்
முழுவதும் துன்பகரமான வாழ்க்கையை மட்டுமே
அனுபவித்து கொண்டு இருக்க மாட்டார்.
சற்று சிந்தித்து பார்த்தல் தெரியும். 

இந்த உலகத்தில் உள்ள எல்லா செயல்களுமே 
இரட்டை இரட்டையாகத்தான் இருக்கும். 
உலகத்தில் படைக்கப்பட்ட அணைத்து பொருட்களுமே 
இந்த விதியின் அடிப்படையில்தான் இருக்கும். 

மின்சாரத்தில் positive negative என்ற இரண்டும் இருந்தால்தான் 
ஒளியை நாம் பெற முடியும். அது போன்று வாழ்க்கையில் 
இன்பமும் துன்பமும் இருந்தால்தான் வாழ்க்கை என்ற ஒளி 
விளக்கு எரிய முடியும். 

ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் நல்ல தொரு சமுதாயத்தை 
உருவாக்க முடியும். 

பூஜயமும் ஒன்று என்ற இரண்டும் இல்லை என்றால் 
கணிபொறி இயங்க முடியாது. 

முடியாது என்ற சொல் இருந்தால்தான் முடியும் என்ற 
வைராக்கியமே பிறக்கும். 

இந்த உலகத்தில் உள்ள பெரும்பால பணக்காரர்களின்
ஆரம்ப கால வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும்.
அவர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாக பிறக்க வில்லை.

உண்ணும் உணவுக்கும் உடுக்கும் உடைக்கும் இருக்கும்
இருப்பிடத்திற்கும் கண்டிப்பாக
மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்கள் .

மிக பெரிய பிரபலங்களாக வலம் வந்து மறைந்த அம்பானி, MGR,
சிவாஜி கணேசன் போன்றவர்களின் சுய சரிதையை படித்தீர்கள்
என்றால் இந்த உண்மை புரியும்.     

அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும்
நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற
நம்பிக்கையின் காரணமாகத்தான் பணக்காரர்களாகவும்
பிரபலமாகவும் வாழ்ந்து மறைந்தனர்.

துன்பங்களை துன்பங்களாக பார்க்காமல் அவைதரும்
அனுபவங்களை படிப்பினையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதற்க்கு உங்கள் மனது பக்குவ பட. வேண்டும் .

துன்பங்களை அனுபவமாக ஏற்றுகொள்ள உங்கள் மனது
தயாராக இருக்க வேண்டும். உங்கள் மனதை அது போன்று
பழக்க வேண்டும்.

உங்கள் மனதை அது போன்று பழக்க படுத்துவதற்கு தியானம்
ஒன்றுதான் சரியான வழி.

தியானம் ஒன்றினால்தான் உங்கள் மனதை கட்டுபடுத்த முடியும்.

தியானம் மட்டும்தான் துன்பத்தை உணர்ச்சி பூர்வமாக பார்க்காமல்
அறிவு பூர்வமாக பார்த்து சரி உலகத்தில் இதெல்லாம் சகஜம்.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசனை செய்ய வைக்கும்.

தியானம் மட்டும்தான்
துன்பம் என்பது நிரந்தரம் அல்ல துன்பங்களை சுலபமாக வெல்லலாம் என்பதை உணர செய்து அடுத்து இன்பம் அடைய என்ன செய்ய வேண்டும் என்ற வழியையும்  காட்டும் அற்புத மருந்தாகும்.    

தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள